பக்கம் எண் :

உண்ணாவிரதம் 517

Untitled Document
இருந்த ஆர்வத்தோடு கூடிய பற்றா என்பதை யார் சொல்ல முடியும்?

     இவ்வாறு திகைத்துத் தெளிவான வழி காண  முடியாமல், நான்
தத்தளித்துக்கொண்டிருந்த சமயத்தில்,    ஒரு நாள் காலை, ஆலைத்
தொழிலாளர்களின்        கூட்டத்தில் திடீரென்று எனக்கு ஓர் ஒளி
தோன்றிற்று. முன் கூட்டி எண்ணிப் பாராமலே என் நாவில் பின்வரும்
சொற்கள் பிறந்தன: “வேலை நிறுத்தம்     செய்திருப்பவர்கள் திடம்
கொண்டு, ஒரு சமரச           முடிவு ஏற்படும் வரையில் வேலை
நிறுத்தத்தைத் தொடர்ந்து       நடத்தினாலன்றி, அல்லது இப்போது
வேலைக்குப் போகிறவர்கள் எல்லோரும்   ஆலைகளிலிருந்து வெளி
வந்துவிடும் வரையில், நான் உணவு கொள்ளப் போவதில்லை” என்று
அக்கூட்டத்தில் கூறினேன்.

     இதைக் கேட்டதும் தொழிலாளர்கள்   இடிவிழுந்ததைப் போல்
திகைத்துப் போயினர். அனுசூயா பென்னின்     கண்களிலிருந்து நீர்
வழிந்து ஓடியது. “நீங்கள்      உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்.
நாங்கள் உண்ணாமல் இருக்கிறோம்.    நீங்கள் பட்டினி இருப்பதைப்
போன்ற பெருங்கொடுமை வேறு இல்லை.     நாங்கள் செய்துவிட்ட
தவறுகளுக்கு எங்களை மன்னித்துவிடுங்கள்.    இனி இறுதிவரையில்
பிரதிக்ஞையில் நிச்சயமாக        உறுதியுடன் இருக்கிறோம்” என்று
தொழிலாளர் எல்லோரும் ஒரே முகமாகக் கூறினார்.

     நான் அப்பொழுது அவர்களுக்குக்      கூறியதாவது: “நீங்கள்
உண்ணாவிரதம் இருக்கவேண்டிய     அவசியமில்லை. உங்களுடைய
பிரதிக்ஞையிலிருந்து வழுவாமல்        நீங்கள் இருந்தாலே போதும்.
நம்மிடம் நிதி இல்லை என்பது        உங்களுக்குத் தெரியும். பொது
ஜனங்களிடம் பிச்சையெடுத்து. அதைக்கொண்டு வேலை நிறுத்தத்தைத்
தொடர்ந்து நடத்திக்கொண்டு போக நாம் விரும்பவில்லை. ஆகையால்,
வேலை நிறுத்தம் எவ்வளவு      காலத்துக்கு தொடர்ந்து நடந்தாலும்,
அதைப்பற்றிய கவலையே     இல்லாமல் நீங்கள் இருந்து வருவதற்கு
ஏதாவது ஒரு வேலையைச்     செய்து ஜீவனத்திற்கு வேண்டியதைத்
தேடிக்கொள்ள             நீங்கள் முயல வேண்டும். என்னுடைய
உண்ணாவிரதத்தைப்          பொறுத்த வரையில் வேலை நிறுத்தம்
முடிந்தபிறகே நான் அதைக் கைவிடுவேன்.”

     இதற்கு மத்தியில்              வேலை நிறுத்தம் செய்திருந்த
தொழிலாளருக்கு முனிசிபாலிடியின் கீழ் ஏதாவது     வேலை தேடிக்
கொடுப்பதற்கு வல்லபாய் முயன்று வந்தார்.   ஆனால், இதில் வெற்றி
பெற முடியும் என்பதற்கு அதிக        நம்பிக்கை எதுவும் இல்லை.
மகன்லால் காந்தி ஒரு யோசனை கூறினார்:   ‘நமது ஆசிரம நெசவுப்
பள்ளிக்கூட அடித்தளத்தை நிரப்புவதற்கு நமக்கு மணல்