பக்கம் எண் :

ஒற்றுமையில் ஆர்வம்529

Untitled Document
அலி சகோதரர்கள் போன்ற தலைவர்களை       அம்மகாநாட்டிற்கு
அழைக்கவில்லை என்பது.        அப்பொழுது அவர்கள் சிறையில்
இருந்தார்கள். அவர்களைக் குறித்து       நான் நிறையக் கேள்விப்
பட்டிருந்தேனாயினும்          இரண்டொரு முறையே அவர்களைச்
சந்தித்திருந்தேன். அவர்களுடைய சேவையைக் குறித்தும்,  தீரத்தைப்
பற்றியும் என்னிடம் எல்லோரும் மிகவும் பாராட்டிக் கூறியிருந்தார்கள்.
ஹக்கீம் சாகிபுடன் அப்பொழுது எனக்கு நெருங்கிய பழக்கம் இல்லை. ஆனால், பிரதமப்  பேராசிரியர் ருத்திராவும் தீனபந்து ஆண்டுரூஸு ம்,
அவருடைய பெருமையைக் குறித்து             என்னிடம் அதிகம்
கூறியிருந்தனர். ஸ்ரீ ஷு வாயிப் குரேஷியையும் ஸ்ரீ    குவாஜாவையும்
கல்கத்தாவில் முஸ்லீம் லீகில்            சந்தித்திருந்தேன். டாக்டர்
அன்ஸாரியுடனும் டாக்டர் அப்துர் ரஹ்மானுடனும் எனக்குப் பழக்கம்
இருந்தது.      உத்தமமான முஸ்லிம்களின் நட்பை நான் நாடினேன்.
முஸ்லிம்களின் புனிதமான,          அதிக     தேசாபிமானமுள்ள
பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு அதன் மூலம்    முஸ்லிம்களின்
மனத்தைத்          தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆவலுடன்
இருந்தேன். ஆகையால்,       அப்படிப்பட்டவர்களுடன் நெருங்கிய
தொடர்பு    வைத்துக்கொள்ளுவதற்காக, அவர்கள் என்னை எங்கே
அழைத்துச் சென்றாலும் போவேன்.          அதற்கு எந்தவிதமான
வற்புறுத்தலும் தேவையே இல்லை.

     ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே   உண்மையான
நட்பு இல்லை என்பதைத் தென்னாப்பிரிக்காவில்   வெகு காலத்திற்கு
முன்பே நான்        தெரிந்துகொண்டேன். ஒற்றுமைக்குத் தடையாக
இருப்பவைகளைப் போக்குவதற்குக் கிடைக்கும்   எந்த வாய்ப்பையும்
நான் தவற விட்டுவிடுவது இல்லை.       முகஸ்துதியாகப் பேசியோ,
சுயமதிப்புக்குப்          பாதகமான வகையில் நடந்தோ ஒருவரைச்
சமாதானப்படுத்திக்கொண்டு விடுவது என்பது    என் சுபாவத்திற்கே
விரோதமானது.         ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை விஷயத்தில்தான்
என்னுடைய அகிம்சை கடுமையான சோதனைக்கு   உள்ளாக நேரும்
என்பதை எனது தென்னாப்பிரிக்க அனுபவம் எனக்குத்  தெளிவாகக்
காட்டியிருந்தது. அதோடு இவ்விஷயமே என்னுடைய   அகிம்சையின்
சோதனைகளுக்கு மிக விஸ்தாரமான இலக்கை அளிக்கிறது  என்றும்
அறிந்திருந்தேன். அந்த    உறுதியே இன்னும் இருந்துவருகிறது. என்
வாழ்நாளின் ஒவ்வொரு கணத்திலும் கடவுள்    என்னைச் சோதித்து
வருகிறார் என்பதையும் உணருகிறேன்.

     தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய போது  இவ்விஷயத்தில்
இவ்விதமான உறுதியான கொள்கையுடன்  நான் இருந்ததனால், அலி
சகோதரர்களுடன் தொடர்பு      பெறுவது மிகவும் முக்கியம் என்று
மதித்தேன். ஆனால், நெருக்கமான பழக்கம் ஏற்படுவதற்கு முன்னால்
அவர்களைத் தனிமையில் வைத்து விட்டனர். கடிதம்