பக்கம் எண் :

530சத்திய சோதனை

Untitled Document
எழுத ஜெயிலர்கள் அனுமதிக்கும் போதெல்லாம் மௌலானா முகமது
அலி, பேதூலிலிருந்தும் சிந்து வாடியிலிருந்தும்      எனக்கு நீண்ட
கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தார். அவர்களைப் போய்ப் பார்க்க
அனுமதி கோரி விண்ணப்பித்துக்கொண்டேன்.     ஆனால், அனுமதி
கிடைக்கவில்லை.

     அலி சகோதரர்கள் சிறைப்பட்ட பின்னரே, கல்கத்தாவில் நடந்த
முஸ்லிம் லீக் மகாநாட்டிற்கு          முஸ்லிம் நண்பர்கள் என்னை
அழைத்திருந்தார்கள். அங்கே        பேசும்படி என்னைக் கேட்டுக்
கொண்டபோது, அலி சகோதரர்கள்      விடுதலையாகும்படி செய்ய
வேண்டியது முஸ்லிம்களின் கடமை என்று பேசினேன். இதற்குச் சில
நாட்களுக்குப் பிறகு இந்த நண்பர்கள்,      அலிகாரிலுள்ள முஸ்லிம்
கல்லூரிக்கு என்னை அழைத்துச் சென்றனர்.    அங்கே பேசுகையில்
தாய்நாட்டிற்குச் சேவை      செய்வதற்காக இளைஞர்கள் பக்கிரிகள்
ஆகவேண்டும் என்று அழைத்தேன்.

     பிறகு அலி சகோதரர்கள் விடுதலைக்காக    அரசாங்கத்துடன்
கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டேன்.      இது சம்பந்தமாக,
கிலாபத் பற்றி அலி சகோதரர்கள்   கொண்டிருந்த கருத்துக்களையும்,
அவர்களுடைய       நடவடிக்கைகளையும் ஆராய்ந்தேன். முஸ்லிம்
நண்பர்களுடனும் விவாதித்தேன்.     இதனால் ஒன்றை உணர்ந்தேன்.
நான் முஸ்லிம்களின் உண்மையான நண்பனாக வேண்டுமானால், அலி
சகோதரர்களின்          விடுதலையைப் பெறுவதற்காகவும், கிலாபத்
பிரச்னையில் நியாயமான முடிவு ஏற்படுவதாகவும், சாத்தியமான எல்லா
உதவிகளையும்              நான் செய்யவேண்டும் என்பதே அது.
அவர்களுடைய கோரிக்கையில்        தரும விரோதமானது எதுவும்
இல்லையென்றால்,      அதன் முழு நியாயங்களையும் குறித்து நான்
ஆராய்ந்துகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. மத சம்பந்தமான
விஷயங்களில்         நம்பிக்கைகள் மாறுபடுகின்றன.  அவரவரின்
நம்பிக்கைதான் அவரவர்களுக்கு மேலானதாகும்.    மத சம்பந்தமான
விசயங்களிலெல்லாம் எல்லோருக்கும்       ஒரேவிதமான நம்பிக்கை
இருக்குமானால், உலகில்    ஒரே ஒரு மதம் தான் இருக்கும். கிலாபத்
சம்பந்தமான முஸ்லிம்களின்           கோரிக்கையில் தருமத்திற்கு
விரோதமானது எதுவும் இல்லை       என்பதோடு மாத்திரம் அல்ல,
முஸ்லிம்களுடைய கோரிக்கையின் நியாயத்தைப்   பிரிட்டிஷ் பிரதம
மந்திரியே ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பதைப் பின்னால்   அறிந்து
கொண்டேன். ஆகையால்,           பிரதம மந்திரியின் வாக்குறுதி
நிறைவேற்றப்படும்படி செய்வதற்கு என்னால்     முடிந்த உதவியைச்
செய்ய நான்    கடமைப்பட்டிருக்கிறேன் என்று கருதினேன். மிகவும்
தெளிவான முறையில் அந்த வாக்குறுதி  அளிக்கப்பட்டு இருந்ததால்,
என்னுடைய      மனச் சாட்சியைத் திருப்தி செய்துகொள்ளுவதற்கு
மாத்திரமே முஸ்லிம்களுடைய