பக்கம் எண் :

ஒற்றுமையில் ஆர்வம்531

Untitled Document
கோரிக்கையின் தகுதியைக் குறித்து நான் பரிசீலனை  செய்துகொள்ள
வேண்டியிருந்தது.

     கிலாபத் பிரச்னையில் நான்      கொண்ட போக்கைக் குறித்து
நண்பர்களும் மற்றவர்களும் குற்றஞ் சொல்லியிருக்கின்றனர். அவர்கள்
கண்டித்திருந்தபோதிலும், என்     கருத்தை மாற்றிக் கொள்ளுவதற்கு
எந்தக் காரணமும் இருப்பதாக நான் எண்ணவில்லை. முஸ்லிம்களுடன்
ஒத்துழைத்ததற்காக நான   வருந்தவும் இல்லை. இதேபோன்ற சமயம்
இனி ஏற்படுமானால், அதே போக்கைத்தான்        நான் அனுசரிக்க
வேண்டும். ஆகையால், நான் டில்லிக்குச் சென்றபோது, முஸ்லிம்களின்
கட்சியை வைசிராய்க்கு     எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற முழு
எண்ணத்துடனேயே சென்றேன். கிலாபத் பிரச்னை,    பின்னால் அது
கொண்ட உருவை அப்பொழுது அடைந்து விடவில்லை.

     ஆனால், நான் டில்லியை அடைந்ததும்,   மகாநாட்டிற்கு நான்
செல்வதிற்கு எதிராக         மற்றொரு கஷ்டமும் ஏற்பட்டது. யுத்த
மகாநாட்டில் நான்          கலந்துகொள்ளுவது தருமமாகுமா என்ற
கேள்வியைத் தீனபந்து ஆண்டுரூஸ் எழுதினார்.    இங்கிலாந்துக்கும்
இத்தாலிக்கும் ஏற்பட்ட ரகசிய     ஒப்பந்தங்களைப்பற்றிப் பிரிட்டிஷ்
பத்திரிகைகளில் நடந்து வந்த        விவாதங்களைக் குறித்து அவர்
எனக்குக் கூறினார். இன்னுமொரு ஐரோப்பிய வல்லரசுடன்  பிரிட்டன்
ரகசியமாக ஒப்பந்தங்கள்      செய்துகொண்டிருக்குமானால், இம்மகா
நாட்டில் எப்படி நான் கலந்துகொள்ள முடியும் என்று ஸ்ரீ ஆண்டுரூஸ்
கேட்டார். ஒப்பந்தங்களைப்பற்றி        எனக்கு எதுவுமே தெரியாது.
தீனபந்து ஆண்டுரூஸ் சொன்னதே எனக்குப் போதுமானது.  ஆகவே,
மகாநாட்டில் கலந்து கொள்ள நான் தயங்குவதன் காரணத்தை விளக்கி
லார்டு      செம்ஸ்போர்டுக்குக் கடிதம் எழுதினேன். இதைக் குறித்து
என்னுடன் விவாதிப்பதற்காக          அவர் என்னை அழைத்தார்.
அவருடனும் அவருடைய அந்தரங்கக் காரியதரிசி    ஸ்ரீ மாபியுடனும்
நீண்ட நேரம் விவாதித்தேன். அதன் பேரில்     மகாநாட்டில் கலந்து
கொள்ளச் சம்மதித்தேன். வைசிராய் வாதத்தின் சாராம்சம்  இதுதான்:
“பிரிட்டிஷ் மந்திரி சபை செய்யும் ஒவ்வொன்றும்    வைசிராய்க்குத்
தெரியும் என்று நிச்சயம் நீங்கள் நம்பிவிட மாட்டீர்கள்.    பிரிட்டிஷ்
அரசாங்கம்   தவறே செய்யாது என்று நான் சொல்லவில்லை; யாரும்
சொல்லவுமில்லை. ஆனால், மொத்தத்தில் சாம்ராஜ்யம்   நல்லதற்கான
ஒரு சக்தி என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால், இந்தியா,
பிரிட்டிஷ் சம்பந்தத்தினால் மொத்தத்தில் நன்மையடைந்திருக்குமாயின்,
சாம்ராஜ்யத்திற்கு ஆபத்து    ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில் அதற்கு
உதவி செய்ய வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை  என்பதை
ஒப்புக் கொள்ளுவீர்களல்லவா?    ரகசிய ஒப்பந்தங்களைக் குறித்துப்