பக்கம் எண் :

404சத்திய சோதனை

Untitled Document
எனக்கு இருந்த ஞானம். முஸ்லிம் நண்பர்களுடன் பழகியதால், நான்
தெரிந்துகொண்ட சாதாரணமான பர்ஸிய,        அரபுச் சொற்களே
உருதுவில் எனக்குத் தெரிந்ததெல்லாம் ஆகும். உயர்தரப் பள்ளியில்
நான் படித்ததற்கு மேல் எனக்குச் சமஸ்கிருதமும் தெரியாது. பள்ளிக்
கூடத்தில் படித்துக் கற்றுக்    கொண்டதற்கு அதிகமானதுமல்ல, என்
குஜராத்தி மொழி ஞானம்.

     இத்தகைய மூலதனத்தைக் கொண்டே      நான் சமாளித்துக்
கொள்ள வேண்டியதாயிற்று. இலக்கியத் தகுதியில்    என் சகாக்கள்
என்னைவிட அதிக வறுமையில்   இருந்தனர். ஆனால், என் நாட்டு
மொழிகளில் எனக்கு இருந்த ஆசை,      உபாத்தியாயராக இருக்க
முடியும் என்பதில் எனக்கு இருந்த நம்பிக்கை,  என் மாணவர்களின்
அறியாமை. அதைவிட அவர்களுடைய      தாராள மனப்பான்மை
ஆகியவைகளெல்லாம் சேர்ந்து      என் வேலையை எளிதாக்கின.

     தமிழ்ச் சிறுவர்கள் எல்லோரும்        தென்னாப்பிரிக்காவில்
பிறந்தவர்கள். ஆகையால், அவர்களுக்குத்    தமிழ் அவ்வளவாகத்
தெரியாது. தமிழ் எழுத்துக்கள்         அவர்களுக்குக் கொஞ்சமும்
தெரியாது. ஆகவே, அவர்களுக்கு நான்    தமிழ் எழுத்துக்களையும்
ஆரம்ப இலக்கண விதிகளையும்              சொல்லிக் கொடுக்க
வேண்டியிருந்தது. இது     மிகவும் எளிதானதே. தமிழில் பேசுவதில்
என்னை எப்பொழுதும் தாங்கள் தோற்கடித்துவிட முடியும் என்பதை
என் மாணவர்கள் அறிவார்கள். ஆங்கிலம் தெரியாத     தமிழர்கள்
என்னைப் பார்க்க வந்தபோது              அம்மாணவர்கள் என்
மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தனர்.   எனக்கிருந்த அறியாமையை
என் மாணவர்களுக்குத்        தெரியாமல் மறைக்க நான் என்றுமே
முயன்றதில்லையாகையால்,       நான் சந்தோஷமாகவே சமாளித்து
வந்தேன். உண்மையாகவே எல்லா விஷயங்களிலும்  நான் எவ்விதம்
இருக்கிறேன் என்பதை           அவர்களுக்குக் காட்டி வந்தேன்.
ஆகையினால், அம்மொழியில்       எனக்கு ஒன்றுமே தெரியாமல்
இருந்தபோதிலும் அவர்களுடைய   அன்பையும்   மரியாதையையும்
மாத்திரம் நான் என்றுமே இழந்ததில்லை.   முஸ்லிம் சிறுவர்களுக்கு
உருது சொல்லிக் கொடுப்பது         இதைவிட எளிதாக இருந்தது.
அம்மொழியின் எழுத்துக்கள்            அவர்களுக்குத் தெரியும்.
படிக்கும்படியும், கையெழுத்தை     விருத்தி செய்துகொள்ளுமாறும்
அவர்களை        உற்சாகப்படுத்துவதே           நான் செய்ய
வேண்டியிருந்ததெல்லாம்.

     இச்சிறுவர்களில்             பெரும்பாலானவர்கள், எழுத்து
வாசனையையே              இதற்கு முன்னால் அறியாதவர்கள்;
பள்ளிக்கூடங்களுக்குச்        சென்றும் அறியாதவர்கள். ஆனால்,
அவர்களுக்கு இருந்த சோம்பலைப் போக்கி, அவர்கள் படிக்கும்படி
மேற்பார்வை