பக்கம் எண் :

மரணத்தின் வாயிலருகில் 541

Untitled Document
எண்ணினேன். மறுநாள் காலை சாப்பிடாமல் இருந்ததால் உண்மையில்
உடம்பு குணமாகியிருப்பதாகவே உணர்ந்தேன்.   ஆனால், முழுவதும்
குணமடைந்துவிடவேண்டுமானால் நீடித்து     உபவாசம் இருந்து வர
வேண்டும். ஏதாவது சாப்பிடுவதாய் இருந்தாலும்  பழ ரசத்தைத் தவிர
வேறு எதுவுமே சாப்பிடக்கூடாது என்பதை அறிவேன்.

     அன்று ஏதோ பண்டிகை நாள்.     மத்தியானம் நான் எதுவும்
சாப்பிடப் போவதில்லை என்று      கஸ்தூரிபாயிடம் கூறியிருந்தேன்.
ஆனால், சாப்பிடும் ஆசையை அவள்   தூண்டி விட்டாள். அதற்குப்
பலியாகிவிட்டேன். பாலையோ,        பாலினால் ஆனவைகளையோ
சாப்பிடுவதில்லை என்று நான்  விரதம் கொண்டிருந்ததால், நெய்க்குப்
பதிலாக எண்ணெய் விட்டு அவள் எனக்காகக் கோதுமைத் தித்திப்புப்
பலகாரம் செய்திருந்தாள்.           ஒரு கிண்ணம் நிறைய பயிற்றங்
கஞ்சியையும் வைத்திருந்தாள்.       இவைகளை உண்பதில் எனக்கு
அதிகப் பிரியம் உண்டு. அவைகளைச் சாப்பிட்டேன். கஸ்தூரிபாயைத்
திருப்தி செய்து, என் நாவின் ருசிக்கும் திருப்தி அளிக்கும்    அளவு
சாப்பிட்டால் கஷ்டப்பட        வேண்டி வராது என்றும் நம்பினேன்.
ஆனால், ருசிப் பிசாசோ எப்பொழுது  சந்தர்ப்பம் கிடைக்கும்  என்று
காத்துக்       கொண்டிருந்தது. மிகக் கொஞ்சமாகச் சாப்பிடுவதற்குப்
பதிலாக வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டேன்.    இதுவே எமனுக்குப்
போதுமான அழைப்பாகி விட்டது. ஒரு      மணி நேரத்திற்கெல்லாம்
சீதபேதி கடுமையாகத் தோன்றிவிட்டது.

     அன்று மாலையே நான்              நதியாத்திற்குத் திரும்ப
வேண்டியிருந்தது.         சபர்மதி ஸ்டேஷனுக்குப் பத்து பர்லாங்கு
தூரம்தான். என்றாலும், அதிகக் கஷ்டத்தின்    பேரிலேயே அங்கே
நடந்து சென்றேன் ஸ்ரீ வல்லபாய், அகமதாபாத்தில் வந்து என்னோடு
சேர்ந்துகொண்டார். நான்   உடல் குணமின்றி இருப்பதைக் கண்டார்.
என்றாலும், வலி எவ்வளவு    கடுமையாக இருந்தது என்பதை நான்
அவருக்குக் காட்டிக் கொள்ளவே இல்லை.

     இரவு பத்து மணிக்கு நதியாத்   போய்ச் சேர்ந்தோம். எங்கள்
தலைமை ஸ்தானமாக நாங்கள்  கொண்டிருந்த ஹிந்து அனாதசிரமம்
ரெயிலடியிலிருந்து அரை         மைல் தூரம்தான். ஆனால், அது
எனக்குப்           பத்துமைல் தூரம்போல இருந்தது. எப்படியோ
சமாளித்துக்கொண்டு அங்கே போய்ச் சேர்ந்து விட்டேன். ஆனால்,
வயிற்றிலிருந்த கடுப்பு வலி      அதிகரித்துக் கொண்டே போயிற்று.
வழக்கமாகப் போகும் கக்கூசு,      தூரத்தில் இருந்ததால், பக்கத்து
அறையிலேயே ஒரு        மலச்சட்டி கொண்டுவந்து வைக்கும்படி
கூறினேன். இதைக் கேட்க எனக்கு    வெட்கமாக இருந்தபோதிலும்
வேறு வழியில்லை. ஸ்ரீ பூல்சந்திரர்,