பக்கம் எண் :

542சத்திய சோதனை

Untitled Document
ஒரு மலச்சட்டியைத் தேடிக்    கொண்டுவந்து வைத்தார். நண்பர்கள்
எல்லோரும் அதிகக் கவலையுடன் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.
அவர்கள் என்னிடம் முழு அன்பையும் காட்டி என்னைக் கவனித்துக்
கொண்டனர். ஆனால்,      எனக்கிருந்த வேதனையை அவர்களால்
போக்கிவிட முடியாது.    என்னுடைய பிடிவாதம் வேறு அவர்களால்
ஒன்றும் செய்ய      முடியாதபடி செய்து விட்டது. வைத்திய உதவி
எதையும் பெற நான்            மறுத்து விட்டேன். நான் மருந்தும்
சாப்பிடுவதில்லை. நான் செய்து விட்ட    தவறுக்குத் தண்டனையை
அனுபவிக்கவே விரும்பினேன்.     ஆகையால், அவர்கள் எதுவுமே
செய்ய இயலாதவர்களாகப் பிரமித்து நின்றனர். இருபத்துநான்கு மணி
நேரத்தில் முப்பது, நாற்பது தடவை பேதியாகி விட்டது. ஆரம்பத்தில்
பழரசமும் சாப்பிடாமல்       பட்டினி இருந்தேன். பசியே இல்லாது
போயிற்று என் உடல்            இரும்புபோலப் பலமானது என்று
நீண்டகாலமாக நான்      எண்ணிவந்தேன். ஆனால், இப்பொழுதோ
இவ்வுடல் வெறும்         களிமண் பிண்டம்போல் ஆகிவிட்டதைக்
கண்டேன். நோயை            எதிர்க்கும் சக்தியையெல்லாம் அது
இழந்துவிட்டது.         டாக்டர் கனுகா வந்து மருந்து சாப்பிடுமாறு
வேண்டினார். மறுத்துவிட்டேன்.        ஊசியினால் குத்தி மருந்தை
ஏற்றுவதாகச்         சொன்னார். அதற்கும் நான் மறுத்துவிட்டேன்.
ஊசியினால் குத்தி       மருந்தை ஏற்றுவதைப் பற்றி அக்காலத்தில்
எனக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்தது   பரிகாசத்திற்குரிய ஒன்றே.

     ஊசியினால் குத்தி ஏற்றும் மருந்து        ஏதோ பிராணியின்
நிணநீராகவே இருக்க வேண்டும்    என்று நம்பினேன். ஊசியினால்
குத்தி எனக்கு ஏற்றுவதாக       டாக்டர்  சொன்ன மருந்து, ஏதோ
மூலிகையின் சத்து என்பது      எனக்குப் பின்னால்தான் தெரிந்தது.
இதைக்        காலங்கடந்தே நான் அறிந்துகொண்டதால் அதனால்
பலனில்லாது போயிற்று. தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருந்தது. நான்
முற்றும் களைத்துப்போனேன்.      களைப்பின் காரணமாக ஜு ரமும்
பிதற்றலும் ஏற்பட்டன. நண்பர்கள்   மேலும் பீதியடைந்து விட்டனர்.
வேறு பல வைத்தியர்களையும்     அழைத்து வந்தார்கள். ஆனால்,
வைத்தியர்களுடைய    யோசனைகளையெல்லாம் கேட்க மாட்டேன்
என்று இருக்கும் நோயாளிக்கு அவர்களால் என்ன செய்ய முடியும்?

     சேத் அம்பாலால் தமது   உத்தம பத்தினியுடன் நதியாத்திற்கு
வந்து என்           சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்தார்.
அகமதாபாத்தில் இருக்கும் தமது மீர்ஜாப்பூர் பங்களாவுக்கு என்னை
மிகவும் ஜாக்கிரதையாகக் கொண்டுபோனார்.   இந்த நோயின்போது
நான் பெற்ற அன்பு    நிறைந்த தன்னலமற்ற தொண்டைப் போன்று
வேறு யாரும் பெற்றிருக்க முடியாது. ஆனால், ஒரு வகையான உள்
ஜு ரம் மாத்திரம் இருந்து கொண்டே