பக்கம் எண் :

544சத்திய சோதனை

Untitled Document
இழந்துவிட்டேன். மரணத்தின் வாயிலில் நிற்கிறேன் என்றே எனக்குத்
தோன்றியது. அனுசூயா பென்னுக்குச்  சொல்லி அனுப்பினேன். அவர்
ஆசிரமத்திற்குப் பறந்தோடி வந்தார். வல்லபாய்,  டாக்டர்.கனுகாவுடன்
வந்து சேர்ந்தார். டாக்டர்,    என் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு,
“உங்கள்    நாடியெல்லாம் நன்றாகவே இருக்கிறது. அபாயம் எதுவும்
இல்லவே இல்லை. பலவீனம் அதிகமாக இருப்பதால்  ஏற்பட்டிருக்கும்
ஆயாசம் இது” என்றார் ஆனால், எனக்கு       மட்டும் நம்பிக்கை
உண்டாகவில்லை. அன்று         இரவெல்லாம் எனக்குத் தூக்கமே
வரவில்லை.

     சாவு வராமலேயே பொழுது விடிந்துவிட்டது.  ஆனால், முடிவு
சமீபித்துவிட்டது என்ற       உணர்ச்சி மாத்திரம் விடாமல் எனக்கு
இருந்தது. ஆகவே   ஆசிரமவாசிகளைக்      கீதையைப் படிக்கச்
சொல்லிக் கேட்பதிலேயே      விழித்திருக்கும் நேரம் முழுவதையும்
கழித்து வந்தேன்.      என்னால் படிக்க முடியாது. பிறரிடம் பேசும்
விருப்பமும்  எனக்கு இல்லை. கொஞ்சமும் பேசினாலும் மூளைக்குக்
களைப்பாயிருந்தது.        வாழ்வதற்காகவே வாழவேண்டும் என்ற
விருப்பம் எனக்கு என்றுமே இல்லையாகையால்,  வாழ்வில் எல்லாச்
சுவையும் போய் விட்டது.              ஒன்றும் செய்யமுடியாமல்
நண்பர்களிடமும் சக ஊழியர்களிடமும்   வேலை வாங்கிக்கொண்டு
உடல் மெள்ளத்  தேய்ந்துகொண்டே போவதைக் காணும் மோசமான
நிலைமையில் வாழ்ந்துகொண்டிருப்பது எனக்கு மிகுந்த துன்பமாகவே
இருந்தது.

     இவ்விதம் சதா சாவை         எதிர்பார்த்துக்கொண்டு நான்
படுத்திருந்தபோது, டாக்டர் தல்வல்கர்,   ஒரு விசித்திர ஆசாமியை
அழைத்துக்கொண்டு அங்கே வந்தார்.          மகாராஷ்டிரத்தைச்
சேர்ந்தவர் அந்த ஆசாமி. அவர் பிரசித்தமானவர் அன்று. ஆனால்,
அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே    அவரும் என்னைப் போன்ற
ஒரு பைத்தியம் என்பதைக் கண்டுகொண்டேன். தம்முடைய சிகிச்சை
முறையை என்னிடம் சோதித்துப் பார்ப்பதற்காகவே  அவர் வந்தார்.
கிரான்ட் வைத்தியக்       கல்லூரியில் அவர் அநேகமாகப் படித்து
முடித்துவிட்டார். ஆனால், இன்னும்    பட்டம் பெறவில்லை. அவர்
பிரம்ம சமாஜத்தில் ஓர்    அங்கத்தினர் என்று பின்னால் எனக்குத்
தெரிந்தது. ஸ்ரீ கேல்கர் என்பது      அவர் பெயர். சுயேச்சையான,
பிடிவாதப் போக்குள்ளவர் அவர்.        பனிக்கட்டிச் சிகிச்சையில்
அவருக்கு அதிக       நம்பிக்கை. அந்தச் சிகிச்சையை என்னிடம்
பரீட்சிக்க விரும்பினார். அவருக்குப்    ‘பனிக்கட்டி டாக்டர்’ என்று
பெயர் வைத்தோம். தேர்ந்த டாக்டர்களுக்கும் தெரியாது போன சில
விஷயங்களைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக   அவருக்குத் திடமான
நம்பிக்கை உண்டு.      தமது சிகிச்சையில் அவர்   கொண்டிருந்த
நம்பிக்கை என்னையும் தொத்திக் கொள்ளும்படி