பக்கம் எண் :

548சத்திய சோதனை

Untitled Document
நான் இரவு பகலாகப் பிரார்த்தித்துக் கொண்டு வருகிறேன்.

     நான் ஆட்டுப்பால் சாப்பிட   ஆரம்பித்ததுமே டாக்டர் தலால்
எனக்கு ஆசனவாய்க் கோளாறுக்கு     வெற்றிகரமான ரணசிகிச்சை
செய்து முடித்தார். என் உடல்    பலம் பெற்று வரவே, முக்கியமாகக்
கடவுள் நான்              செய்வதற்கென்று வேலையைத் தயாராக
வைத்திருந்ததால்,     உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்குத்
திரும்பவும் பிறந்தது.

     குணமடைந்து வருகிறேன் என்று நான் உணர ஆரம்பித்ததுமே,
ரௌலட் கமிட்டியின் அறிக்கையை     தற்செயலாகப் பத்திரிகையில்
படித்தேன். அந்த அறிக்கை   அப்பொழுதுதான் வெளியாகியிருந்தது.
அக்கமிட்டியின் சிபாரிசுகள்         என்னைத் திடுக்குறச் செய்தன.
சங்கரலால் பாங்கரும்,     உமார் சோபானியும்    என்னிடம் வந்து,
இவ்விஷயத்தில்            நான் உடனே    ஏதாவது நடவடிக்கை
எடுத்துக்கொள்ள வேண்டும் என்று     யோசனை கூறினார்கள். ஒரு
மாதத்தில் நான் அகமதாபாத்திற்குப் போனேன். அநேகமாகத் தினமும்
என்னைப் பார்ப்பதற்கு வல்லபாய் வருவார்.      அவரிடம் எனக்கு
இருந்த சந்தேகங்களைக் கூறினேன்.  “ஏதாவது செய்தாக வேண்டும்”
என்றேன். அதற்கு அவர், “இந்த நிலைமையில்   நாம் என்ன செய்ய
முடியும்?” என்று என்னைக் கேட்டார்.        நான் சொன்னதாவது:
“அம்மசோதாக்களை எதிர்ப்பது என்ற பிரதிக்ஞையில் கையெழுத்திட
ஒரு சிலர் கிடைத்தாலும் போதும்.     அதையும் பொருட்படுத்தாமல்
சட்டம் செய்யப்பட்டு விடுமானால், நாம் உடனே  சத்தியாக்கிரகத்தை
ஆரம்பித்துவிட வேண்டியதே. நான்          இதுபோல் நோயுற்றுக்
கிடக்காமல் இருந்தால்,      மற்றவர்கள் என்னைப் பின்பற்றுவார்கள்
என்று       எதிர்பார்த்து நானே தன்னந்தனியாக அதை எதிர்த்துப்
போராடுவேன். ஆனால், நான்    இப்பொழுது இருக்கும் இத்திக்கற்ற
நிலைமையில்            அந்த வேலை என்னால் ஆகாது என்றே
எண்ணுகிறேன்.”

     இவ்விதம் நாங்கள் பேசியதன் பேரில்,    என்னுடன் தொடர்பு
வைத்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம்   அழைத்து ஒரு கூட்டம்
கூட்டுவது என்று முடிவாயிற்று.      ரௌலட் கமிட்டி அறிக்கையில்
பிரசுரமாகியிருக்கும்          சாட்சியங்களைக் கொண்டு பார்த்தால்,
அக்கமிட்டியின் சிபாரிசுகள்    அவசியமில்லாதவை என்று எனக்குத்
தோன்றியது. மானமுள்ள யாரும் அந்தச் சிபாரிசுகளுக்கு உடன் பட்டு
இருந்து விடமுடியாது என்றும் உணர்ந்தேன்.

     முடிவாக அக்கூட்டமும் ஆசிரமத்தில் நடந்தது.   இருபதுபேர்
கூட அக்கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. வல்லபாயைத் தவிர ஸ்ரீ
மதி சரோஜினி நாயுடு, ஸ்ரீ ஹார்னிமன், காலஞ்சென்ற