பக்கம் எண் :

ரௌலட் மசோதாக்கள் : என் மனக்குழப்பம் 549

Untitled Document
ஸ்ரீ உமார் சோபானி, ஸ்ரீ சங்கரலால் பாங்கர்,     ஸ்ரீ மதி அனுசூயா
பென் ஆகியவர்களே      அக்கூட்டத்திற்கு வந்திருந்தார்கள் என்று
எனக்கு ஞாபகம்.   சத்தியாக்கிரக பிரதிக்ஞை நகலை இக்கூட்டத்தில்
தயாரித்தோம்.               வந்திருந்தவர்கள் எல்லோரும் அதில்
கையெழுத்திட்டார்கள் என்றும் எனக்கு ஞாபகம்.    அச்சமயம் நான்
எந்தப் பத்திரிகையையும் நடத்தவில்லை. ஆனால், என் கருத்துக்களை
எப்பொழுதாவது தினப்பத்திரிகைகளின் மூலம் வெளியிட்டு வருவேன்.
இச்சமயமும்          அவ்வாறே செய்தேன்.    சங்கரலால் பாங்கர்
இக்கிளர்ச்சியில் தீவிரமாக இறங்கிவிட்டார். வேண்டிய ஏற்பாடுகளைச்
செய்து, உறுதியுடன் விடாமல்  வேலை செய்வதில் அவருக்கு இருந்த
அற்புதமான ஆற்றலைப்பற்றி    முதல் தடவையாக அப்பொழுதுதான்
நான் தெரிந்து கொண்டேன்.

     சத்தியாக்கிரகத்தைப் போன்ற     புதியதானதோர் ஆயுதத்தை,
அப்பொழுது இருந்த ஸ்தாபனங்களில்   எதுவும் அனுசரிக்கும் என்ற
நம்பிக்கையெல்லாம் வீண் என்று    எனக்குத் தோன்றியது. ஆகவே,
என்னுடைய யோசனையின் பேரில்   சத்தியாக்கிரக சபை என்ற ஒரு
தனி ஸ்தாபனம்              ஆரம்பமாயிற்று. அதன் முக்கியமான
அங்கத்தினர்களெல்லாம்     பம்பாயைச் சேர்ந்தவர்கள். ஆகையால்,
அதன் தலைமைக் காரியாலயம்          அங்கே அமைக்கப்பட்டது.
அச்சங்கத்தில் சேர ஏராளமானவர்கள்     விரும்பிப் பிரதிக்ஞையில்
கையெழுத்திட்டார்கள்.      துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டோம்.
பொதுக்கூட்டங்கள் எல்லா          இடங்களிலும் நடந்தன. கேடாச்
சத்தியாக்கிரகப் போராட்டத்தின்         முக்கியமான அம்சங்களை
இவையெல்லாம் நினைவூட்டின.

     சத்தியாக்கிரக சபைக்கு நான் தலைவனானேன்.  இச் சபையில்,
படித்த அறிவாளிகள் என்று          இருந்தவர்களுக்கும் எனக்கும்
அபிப்பிராய ஒற்றுமை  இருப்பதற்கில்லை என்பதைச் சீக்கிரத்திலேயே
கண்டுகொண்டேன். சபையில் குஜராத்தி மொழியையே   உபயோகிக்க
வேண்டும் என்று வற்புறுத்தினேன். அதோடு, என்னுடைய மற்றும் சில
வேலை முறைகளும் அவர்களுக்கு   விசித்திரமாகத் தோன்றியதோடு
அவர்களுக்குக் கவலையையும்        சங்கடத்தையும் உண்டாக்கின.
ஆனால்,       அவர்களில் அநேகர் பெரிய மனதோடு என்னுடைய
விசித்திரப் போக்குகளை           எல்லாம் சகித்துக்கொண்டார்கள்
என்பதையும் நான் சொல்லவே வேண்டும்.

     ஆனால், சபை நீண்ட காலம்    உயிரோடு இருக்காது என்பது
ஆரம்பத்திலிருந்தே எனக்குத்        தெளிவாகத் தெரிந்து விட்டது.
சத்தியத்தையும்        அகிம்சையையும் நான்   வற்புறுத்தி வந்தது
அச்சபையின் அங்கத்தினர்களில்        சிலருக்குப் பிடிக்கவில்லை
என்பதையும் நான் கண்டுகொள்ள முடிந்தது. என்றாலும்,