பக்கம் எண் :

விரும்பி மேற்கொண்ட விரதம்55

Untitled Document
பட்டினிதான். அந்த நண்பர் மாமிசம் சாப்பிடும்படி  ஓயாமல் எனக்கு
எடுத்துக் கூறிக்      கொண்டே இருந்தார்.  நானும் என் விரதத்தை
அதற்குச் சமாதானமாகக்   கூறிவிட்டுப்  பேசாமல் இருந்துவிடுவேன்.
மத்தியானச் சாப்பாட்டிற்கும்       இரவு உணவுக்கும்  எங்களுக்குப்
பசலைக் கீரையும் ரொட்டியும் ஜாமும் இருக்கும்.   நானோ நன்றாகச்
சாப்பிடுகிறவன்; பெருவயிறு படைத்தவன். ஆனால்,  இரண்டு மூன்று
ரொட்டித் துண்டுகளுக்கு அதிகமாகக்      கேட்பது சரியல்லவென்று
தோன்றியதால்            அதிகமாகக் கேட்கவும் எனக்கு வெட்கம்.
போதாததற்கு      மத்தியானத்திலும்,  இரவிலும் சாப்பாட்டில் பாலும்
கிடையாது. இந்த   நிலையைக் கண்டு அந்த நண்பருக்கு வெறுத்துப்
போய் விட்டது. அவர்  பின்வருமாறு சொன்னார்: “நீர் என் சொந்தச்
சகோதரனாக இருந்தால்  மூட்டை கட்டி ஊருக்கு அனுப்பியிருப்பேன்.
இங்குள்ள நிலையை  அறியாமல், எழுத்து வாசனையே இல்லாத ஒரு
தாயாரிடம் செய்து கொடுத்த   சத்தியத்திற்கு என்ன மதிப்பு உண்டு?
அது ஒரு விரதமே அல்ல.      சட்டப்படி அதை ஒரு விரதமாகவும்
கருதுவதற்கில்லை. அத்தகைய      ஒரு சத்தியத்தில் விடாப்பிடியாக
இருப்பது மூடநம்பிக்கையைத் தவிர     வேறொன்றுமில்லை. மேலும்,
இந்தப்   பிடிவாதத்தினால் இங்கே உமக்கு      எந்தவிதப் பயனும்
உண்டாகாது    என்பதையும்     கூறுகிறேன்.   மாமிசத்தை முன்பு
சாப்பிட்டதாகவும்,    அது உமக்குச்    சுவையாக இருந்தது என்றும்
ஒப்புக்கொள்ளுகிறீர்; எங்கே முற்றும்    அவசியமில்லையோ அங்கே
நீர் அதைச்           சாப்பிட்டிருக்கிறீர்.   அவசியமான இடத்தில்
உண்ணமாட்டேன் என்கிறீர்; இது என்ன பரிதாபம்!”.

     ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன். நாள் தவறாமல் அவர்
இதைக் குறித்து என்னிடம் தர்க்கம்     செய்துகொண்டே இருப்பார்.
முடியாது என்று எப்பொழுதும் அவருக்குப் பதில் சொல்லி விடுவேன்.
அவர் தர்க்கம்         செய்யச்  செய்ய நானும்          அதிகப்
பிடிவாதக்காரனாவேன். கடவுளின்  பாதுகாப்பைக் கோரித்   தினமும்
பிரார்த்திப்பேன்.      அதை  அடையவும் அடைவேன். கடவுளைப்
பற்றிய ஞானம் அப்பொழுதே        எனக்கு இருந்தது என்பதல்ல;
நம்பிக்கை தான் அது. எனக்குச்     செவிலித் தாயாக இருந்த அந்த
நல்ல ரம்பா விதைத்த நம்பிக்கையின்      விதையே வேலை செய்து
வந்தது.

     ஒரு நாள் அந்த நண்பர்,   பெந்தாம் எழுதிய ‘பயன்படுவதன்
தத்துவம் (Theory of Utility)’ என்ற நூலை     எனக்குப் படித்துக்
காட்டினார். எனக்கு ஒன்றுமே     புரியவில்லை. அதன் நடை, நான்
புரிந்துகொள்ள    முடியாத அளவுக்குக் கடினமாக இருந்தது. அதன்
பொருளை        விளக்கவும் ஆரம்பித்தார்.    அப்பொழுது நான்
சொன்னேன்: “தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள் ;   இந்த