பக்கம் எண் :

56சத்திய சோதனை

Untitled Document
நுட்பமான விஷயங்களெல்லாம் எனக்கு    விளங்கமாட்டா. மாமிசம்
சாப்பிடுவது அவசியம் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன்.   ஆனால்,
நான் கொண்ட    விரதத்திற்குப் பங்கம் செய்ய முடியாது.  இதைப்
பற்றி என்னால் விவாதிக்கவும் முடியாது.   அப்படியே  உங்களோடு
விவாதித்தாலும் வெற்றிபெற      முடியாதென்பதும் நிச்சயம்.  நான்
முட்டாள், பிடிவாதக்காரன் என்று என்னை  விட்டு விடுங்கள்.  என்
மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பை உணருகிறேன். என் நலத்தில்
நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள்   என்பதையும் அறிகிறேன்.
எனக்காக நீங்கள் கவலைப்படுவதனாலேயே இதைப் பற்றி அடிக்கடி
எனக்கு கூறி வருகிறீர்கள்  என்பதையும் அறிவேன். ஆனால், நான்
உங்கள் புத்திமதிப்படி நடக்க முடியாது. விரதம் விரதமே.  அதற்குப்
பங்கம் செய்ய என்னால் ஆகாது.

     அந்த நண்பர் ஆச்சரியத்தோடு என்னை   உற்றுப் பார்த்தார்.
புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, “நல்லது. இனிமேல் உம்மிடம் வாதம்
செய்யமாட்டேன்”   என்றார். நான் மகிழ்ச்சியடைந்தேன். பிறகு இது
விஷயமாக என்னிடம் அவர் விவாதிக்கவே இல்லை.  ஆனால், என்
விஷயத்தில் கவலைப்படுவதை மாத்திரம்  அவர் விட்டு விடவில்லை.
அவர் புகை பிடிப்பார் ;   குடிப்பார்.  ஆனால், அப்படி செய்யுமாறு
என்னை அவர் கேட்டதே இல்லை. உண்மையில் இந்த     இரண்டு
பழக்கங்களும் எனக்குக் கூடாது என்றே சொல்லி வந்தார்.  மாமிசம்
சாப்பிடாவிடில் நான் பலவீனமாகிவிடுவேன், அதனால், இங்கிலாந்தில்
நான் சுகமாக வசிக்க      முடியாது போகும் என்பது     ஒன்றே
அவருடைய கவலையெல்லாம்.

     இப்படி ஒரு மாதம் நான் பயிற்சி பெற்றேன்.   நண்பரின் வீடு
ரிச்மாண்டில் இருந்தது. வாரத்தில் இரண்டொரு  முறைகளுக்கு மேல்
லண்டனுக்குப் போவது   சாத்தியமில்லை.   ஆகவே,  லண்டனுக்கு
அருகில் உள்ள ஏதாவது      ஒரு குடும்பத்தோடு என்னைத் தங்க
வைக்க வேண்டும் என்று     டாக்டர் மேத்தாவும் ஸ்ரீ தளபத் ராம்
சுக்லாவும் முடிவு செய்தனர்.         மேற்குக் கென்சிங்டனில் ஓர்
ஆங்கிலோ-இந்தியரின்       வீட்டைக் கண்டுபிடித்து,  ஸ்ரீ சுக்லா
என்னை அங்கே    கொண்டுபோய் விட்டார்.   அந்த வீட்டுக்கார
அம்மாள் விதவை.  என்னுடைய    விரதத்தைக் குறித்து அவரிடம்
கூறினேன்.        என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளுவதாக
அம்மூதாட்டி வாக்களித்தார்.       அவர் வீட்டில் வசிக்கலானேன்.
அங்கும் கூட அநேகமாக      நான் பட்டினி கிடக்கவே நேர்ந்தது.
மிட்டாயும் பலகாரங்களும் அனுப்புமாறு வீட்டுக்கு எழுதியிருந்தேன்.
ஆனால், எதுவும் இன்னும் வந்து சேரவில்லை.   அங்கே கொடுத்த
சாப்பாடெல்லாம் எனக்குச்         சப்பென்று இருந்தது.  சாப்பாடு
பிடித்திருக்கிறதா என்று அம் மூதாட்டி தினமும் என்னைக் கேட்பார்.
ஆனால், அவர்தான்