பக்கம் எண் :

விரும்பி மேற்கொண்ட விரதம்57

Untitled Document
என்ன செய்வார்? முன்பு     இருந்தது போலவே இன்னும் எனக்கும்
கூச்சம்      அதிகமாகவே இருந்தது.    முதலில் பரிமாறியதை விட
அதிகமாக எதையும்      கேட்கும் துணிவு எனக்கு இல்லை.  அந்த
அம்மாளுக்கு இரு பெண்கள். அதிகப்படியாக இரண்டொரு ரொட்டித்
துண்டுகளை அப்பெண்கள்       வற்புறுத்தி எனக்கு வைப்பார்கள்.
ஆனால், ஒரு முழு ரொட்டிக்குக் குறைந்த எதனாலும்   என் வயிறு
நிரம்பாது என்பது அவர்களுக்குத் தெரியவே இல்லை!

     ஆனால், இதற்குள் எனக்குக் கால் முளைத்துவிட்டது. இன்னும்
என் பாடங்களை நான் படிக்க       ஆரம்பிக்கவில்லை. ஸ்ரீ சுக்லா
தூண்டியதன் பேரில் அப்பொழுதுதான்     பத்திரிகைகளைப் படிக்க
ஆரம்பித்தேன். இந்தியாவில் நான்       செய்திப் பத்திரிகைகளைப்
படித்ததே இல்லை.     இங்கே       தொடர்ந்து படித்து வந்ததால்
பத்திரிகைகளைப் படிப்பதில்   எனக்குச் சுவை ஏற்பட்டது. “டெய்லி
நியூஸ்’,        ‘டெய்லி டெலகிராப்’,   ‘பால்மால் கெஜட்’  ஆகிய
பத்திரிகைகளை, எப்பொழுதும்    மேலெழுந்தவாரியாகப் படிப்பேன்.
இதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகாது.    ஆகவே,  அங்கும்
இங்கும் சுற்ற ஆரம்பித்தேன்.   சைவச்  சாப்பாடு விடுதி எங்காவது
இருக்கிறதா என்று தேட முற்பட்டேன்.       அத்தகைய சாப்பாட்டு
விடுதிகள் நகரில் இருக்கின்றன என்று நான் தங்கியிருந்த வீட்டுக்கார
அம்மாள் கூறியிருந்தார்.    தினம் பத்துப் பன்னிரண்டு மைல் தூரம்
சுற்றுவேன். மலிவான சாப்பாட்டு விடுதிக்குப் போய்   அங்கே வயிறு
நிறைய    ரொட்டியைத் தின்பேன்.  என்றாலும்,  எனக்குத் திருப்தி
ஏற்படாது.        இவ்வாறு சுற்றி அலைந்து வரும் போது ஒரு நாள்
பாரிங்டன் தெருவில் ஒரு        சைவச்   சிற்றுண்டிச் சாலையைக்
கண்டுபிடித்தேன். அதைக் கண்டதும்,   தன் மனத்துக்கு இனியதைக்
கண்டதும் ஒரு குழந்தைக்கு என்ன குதூகலம் ஏற்படுமோ அவ்வளவு
ஆனந்தம்      எனக்கு உண்டாயிற்று.   அதற்குள் போகும் முன்பு,
கதவுக்கு அருகில் கண்ணாடி          ஜன்னலில் விற்பனைக்காகப்
புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். அவற்றில்    சால்ட்
எழுதிய ‘சைவ உணவின் முக்கியத்துவம்’ என்ற புத்தகமும் இருந்தது.
ஒரு ஷில்லிங் கொடுத்து அதை வாங்கிக்கொண்டு நேரே  சாப்பாட்டு
அறைக்குச் சென்றேன். இங்கிலாந்துக்கு வந்த பிறகு நான்   வயிறார
உண்ட முதல் சாப்பாடு இதுதான்.       கடவுள்  எனக்குத் துணை
செய்துவிட்டார்.

     சால்ட் எழுதிய அந்த நூலை       ஒரு வரிவிடாமல் படித்து
முடித்தேன்.       அது என் மனதைப் பெரிதும் கவர்ந்தது. அந்தப்
புத்தகத்தைப் படித்த நாள் முதற்கொண்டே, என் இஷ்டத்தின் பேரில்
நான் சைவ உணவு விரதம் பூண்டவனானேன் என்று நான் சொல்லிக்
கொள்ள முடியும்.     என் தாயாரின் முன்பு நான் விரதம் எடுத்துக்
கொண்ட நாளை வாழ்த்தினேன். சத்தியத்தைக் காப்பாற்ற