பக்கம் எண் :

554சத்திய சோதனை

Untitled Document
வருமாறு என்னை அழைத்தார்.     பம்பாயில் ஏப்ரல் 6-ஆம் தேதி
வைபவங்கள் முடிந்தவுடனேயே    நான் டில்லிக்குப் புறப்படுவதாக
அவருக்குப் பதில் தந்தி கொடுத்தேன்.

     டில்லியில் நடந்த அதே கதையே லாகூரிலும்,  அமிர்தசரஸிலும்
சில வித்தியாசங்களுடன் நடந்தன.      அமிர்தசரஸிலிருந்த டாக்டர்
சத்தியபாலும்;         டாக்டர் கிச்சலுவும் உடனே அங்கே வருமாறு
வற்புறுத்தி என்னை அழைத்தார்கள்.      அச்சமயம் அவர்களுடன்
எனக்குக்    கொஞ்சமும் பழக்கமே இல்லை. என்றாலும், டில்லிக்குப்
போய்விட்டு அமிர்தசரஸு க்கு வர     உத்தேசித்திருக்கிறேன் என்று
அவர்களுக்குத் தெரிவித்தேன்.

     ஆறாம் தேதி காலை           பம்பாய் நகர மக்கள் கடலில்
நீராடுவதற்காகச்       சௌபாத்திக்கு ஆயிரக்கணக்கில் சென்றனர்.
நீராடிய பிறகு ஊர்வலமாகத்        தாகூர்துவாருக்குப் போனார்கள்.
ஊர்வலத்தில் ஓரளவுக்குப் பெண்களும்   குழந்தைகளும் இருந்தனர்.
முஸ்லிம்களும் ஏராளமாக       ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள்.
ஊர்வலத்திலிருந்த எங்களில் சிலரை,    முஸ்லிம் நண்பர்கள், தாகூர்
துவாருக்குப் பக்கத்திலிருந்த மசூதிக்கு     அழைத்துச் சென்றார்கள்.
அங்கே என்னையும்           ஸ்ரீ மதி நாயுடுவையும் பேசும்படியும்
செய்தார்கள். சுதேசி விரதத்தையும்      ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைப்
பிரதிக்ஞையையும் மக்கள்           அந்த இடத்திலேயே எடுத்துக்
கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று ஸ்ரீ விட்டல்தாஸ் ஜேராஜானி
யோசனை கூறினார். ஆனால்           அந்த யோசனைக்கு நான்
சம்மதிக்கவில்லை. பிரதிக்ஞைகளை     அவசரத்தில் கூறி, அவற்றை
மக்கள் மேற்கொள்ளும்படி செய்யக் கூடாது என்றும்,   இதுவரையில்
மக்கள் செய்திருப்பதைக் கொண்டே நாம்  திருப்தியடைய வேண்டும்
என்றும் சொன்னேன்.           ஒரு முறை செய்துகொண்டு விட்ட
பிரதிக்ஞையை மீறி நடக்கக் கூடாது. ஆகையால், சுதேசி விரதத்தின்
உட்கருத்துக்களை மக்கள் தெளிவாக     அறிய வேண்டும் என்றும்,
ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைப்பற்றிய    பிரதிக்ஞையினால் ஏற்படக்
கூடிய பெரும் பொறுப்புக்களைச் சம்பந்தப்பட்ட எல்லோரும் முற்றும்
உணர்ந்திருக்க வேண்டும்        என்றும் கூறினேன். முடிவாக ஒரு
யோசனையும் சொன்னேன்.   பிரதிக்ஞை        எடுத்துக்கொள்ள
விரும்புகிறவர்கள், அதற்காக மறுநாள் காலையில் திரும்பவும் அங்கே
கூடவேண்டும் என்றேன்.

     பம்பாயில் ஹர்த்தால் பூரண  வெற்றியுடன் நடந்தது என்பதைச்
சொல்லத் தேவையில்லை. சாத்விகச் சட்ட மறுப்பை  ஆரம்பிப்பதற்கு
வேண்டிய எல்லா         ஏற்பாடுகளையும் செய்திருந்தோம். இதன்
சம்பந்தமாக இரண்டு,       மூன்று விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
பொதுமக்களால் எளிதில் மீறக் கூடியவைகளாக இருக்கும் சட்டங்கள்
விஷயத்தில் மாத்திரமே