பக்கம் எண் :

மறக்கமுடியாத அந்த வாரம்! - 1555

Untitled Document
சட்ட மறுப்புச் செய்வது       என்று முடிவாயிற்று. உப்பு வரி மீது
மக்களுக்கு மிகுந்த வெறுப்பு இருந்தது.       அச்சட்டத்தை ரத்துச்
செய்யும்படி பார்க்க வேண்டும்      என்பதற்குப் பலமான இயக்கம்
ஒன்றும் கொஞ்ச காலமாக நடந்துவந்தது.       ஆகையால், உப்புச்
சட்டங்களை மீறி மக்கள்       தங்கள் வீடுகளிலேயே கடல்நீரைக்
கொண்டு      உப்புத் தயாரிக்கும்படி செய்யலாம் என்று யோசனை
கூறினேன். என்னுடைய          மற்றொரு யோசனை, அரசாங்கம்
தடுத்திருக்கும் பிரசுரங்களை விற்கலாம் என்பது.  நான்     எழுதிய
புத்தகங்களில் இரண்டு ‘ஹிந்த் சுயராஜ்’,      ‘சர்வோதயா’ (ரஸ்கின்
எழுதிய கடையனுக்கும் கதிமோட்சம் என்ற       நூலைத் தழுவிக்
குஜராத்தியில் எழுதியது)         இவை இரண்டையும் அரசாங்கம்
தடுத்திருந்தது. இக்காரியத்திற்கு அவ்விரு புத்தகங்களையும்  உடனே
எடுத்துக் கொள்ளலாம். அவற்றை அச்சிட்டுப் பகிரங்கமாக விற்பனை
செய்வது, சாத்விகச் சட்டமறுப்புச் செய்வதற்கு எளிதான வழி என்று
தோன்றியது. ஆகவே,              இதற்குப் போதுமான பிரதிகள்
அச்சிடப்பட்டன. பட்டினி      விரதம் முடிந்த பிறகு அன்று மாலை
நடக்கவிருந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் அப்புத்தகங்களை
விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

     அதன்படி ஆறாம் தேதி மாலை,          தடுக்கப்பட்டிருந்த
அப்புத்தகங்களைப்               பொதுமக்களிடையே விற்பதற்கு
அப் பிரசுரங்களுடன் ஏராளமான தொண்டர்கள் வெளி வந்தனர். ஸ்ரீ
மதி சரோஜினி தேவியும் நானும் மோட்டாரில் வெளியே  சென்றோம்.
எல்லாப் பிரதிகளும் உடனே          விற்றுப்போயின. விற்று வந்த
பணத்தைச் சட்ட   மறுப்பு இயக்கத்திற்காகவே செலவிடுவது என்பது
ஏற்பாடு. இவ்விரு புத்தகங்களுக்கும்,     பிரதி நான்கு அணா என்று
விலை வைத்தோம். ஆனால், அந்தப் பிரதிகளை    என்னிடமிருந்து
யாரும் நாலணா மாத்திரமே கொடுத்து வாங்கியதாக எனக்கு நினைவு
இல்லை. ஏராளமானவர்கள்            தங்கள் கையிலிருந்த பணம்
முழுவதையும் அப்படியே        கொடுத்துவிட்டு, அப்புத்தகங்களை
வாங்கினார்கள். ஒரு பிரதியை வாங்க ஐந்து ரூபாய்,    பத்து ரூபாய்
நோட்டுகள் வந்து குவிந்தன. ஒரு பிரதியை ஐம்பது  ரூபாய்க்கு நான்
விற்றதாகவும்         நினைவிருக்கிறது!       தடுக்கப்பட்டிருக்கும்
இப்புத்தகங்களை வாங்குவதற்காக அவர்கள்   கைது செய்யப்பட்டுச்
சிறையிலும்      அடைக்கப்படக் கூடும் என்பதும் பொதுமக்களுக்கு
எடுத்துக் கூறப்பட்டது. ஆனால்,     அத் தருணம் அவர்கள், சிறை
செல்லும் பயம் முழுவதையுமே அடியோடு ஒழித்திருந்தார்கள்.

     தான் தடுத்திருந்த இப்புத்தகங்கள்        இவ்வாறு விற்பனை
செய்யப்பட்டது சம்பந்தமாக அரசாங்கம் தனக்குச் சௌகரிய