பக்கம் எண் :

556சத்திய சோதனை

Untitled Document
மானதோர் கருத்தை    மேற்கொண்டது     என்பதை நான் பிறகே
அறிந்தேன்.        உண்மையில் விற்கப்பட்ட புத்தகங்கள் தன்னால்
தடுக்கப்பட்ட        புத்தகங்கள் அல்ல என்றும், ஆகவே நாங்கள்
விற்றவை ‘தடுக்கப்பட்ட புத்தகங்கள்’      என்ற விளக்கத்தின் கீழ்
வந்தவை என்று கருதப்படவில்லை என்றும் அரசாங்கம்  கருதியதாம்.
புதியதாக அச்சிட்டது,              தடுக்கப்பட்டிருந்த புத்தகத்தின்
மறுபதிப்பேயாகையால்,    அவற்றை விற்பது சட்டப்படி குற்றமாகாது
என்று அரசாங்கம்  கருதியது. இச்செய்தி பொதுவாக ஏமாற்றத்தையே
அளித்தது.

     மறுநாள் காலை சுதேசி,          ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைப்
பிரதிக்ஞைகளைச்      செய்து கொள்ளுவதற்காக மற்றோர் கூட்டம்
நடந்தது. மின்னுவதெல்லாம் தங்கம்    ஆகிவிடாது என்பதை முதல்
தடவையாக        விட்டல்தாஸ் ஜேராஜானி உணர்ந்து கொண்டார்.
அக்கூட்டத்திற்கு         மிகச் சிலரே வந்திருந்தார்கள். அச்சமயம்
வந்திருந்த    சில சகோதரிகளை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
அக்கூட்டத்திற்கு வந்த ஆண்களும்    ஒரு சிலரே நான் பிரதிக்ஞை
நகலை முன்னதாக             தயாரித்துக்கொண்டு வந்திருந்தேன்.
அப்பிரதிக்ஞையை    எடுத்துக்கொள்ளுமாறு   வந்திருந்தவர்களிடம்
சொல்லுவதற்கு முன்னால், அதன் பொருளை  அவர்களுக்கு நன்றாக
விளக்கிச்  சொன்னேன். கூட்டத்திற்குச் சிலரே வந்திருந்தது எனக்கு
வியப்பையோ, ஆச்சரியத்தையோ    உண்டாக்கவில்லை. ஏனெனில்,
பொதுஜனப் போக்கிலிருக்கும்    வழக்கமான ஒரு தன்மையை நான்
கவனித்து வந்திருக்கிறேன்.      ஆவேசம் தரும் வேலையென்றால்
பிரியப்படுவார்கள். அமைதியான        ஆக்க வேலை என்றாலோ
அவர்களுக்கு      வெறுப்பு. அந்தத் தன்மை இன்றைக்கும் இருந்து
வருகிறது.

     ஆனால், இவ்விஷயத்தைக் குறித்து நான் ஓர்   அத்தியாயமே
எழுத வேண்டும். எனவே,     தொடர்ந்து கதைக்கே திரும்புவோம்.
டில்லிக்கும்        அமிர்தசரஸு க்கும்   போக 7-ஆம் தேதி இரவு
புறப்பட்டேன். 8-ஆம் தேதி    மதுராவை அடைந்ததும் நான் கைது
செய்யப்படலாம் என்ற      வதந்திகள் இருப்பதாக முதன் முதலாக
அறிந்தேன்.        மதுராவுக்கு அடுத்தபடி ரெயில் நின்ற இடத்தில்
என்னைப் பார்க்க ஆச்சாரிய கித்வானி வந்தார்.   என்னைக் கைது
செய்யப் போகிறார்கள் என்ற          திடமான  செய்தியை அவர்
சொன்னதோடு நான்     இடும் வேலையைச் செய்யத் தாம் தயாராக
இருப்பதாகவும் கூறினார். இதற்காக     அவருக்கு நன்றி கூறினேன்.
அவசியமாகும்போது       அவருடைய சேவையைப் பயன்படுத்திக்
கொள்ளத் தவறமாட்டேன் என்றும் அவருக்கு   உறுதி சொன்னேன்.

     ரெயில், பால்வால் ஸ்டேஷனை  அடைவதற்கு முன்னாலேயே
எழுத்து மூலமான உத்தரவு ஒன்றை எனக்குக் கொடுத்தார்கள்.