பக்கம் எண் :

மறக்கமுடியாத அந்த வாரம்! - 1557

Untitled Document
பாஞ்சாலத்திற்குள் நான் போனால்         அங்கே அமைதி கெட்டு
விடுமாகையால் பாஞ்சாலத்தின் எல்லைக்குள்   நான் போகக் கூடாது
என்று தடுக்கப்பட்டிருப்பதாக அந்த உத்தரவு கூறியது. ரெயிலிலிருந்து
இறங்கும்படியும் என்னிடம்         போலீஸார் கூறினர். “வற்புறுத்தி
அழைக்கப்பட்டிருப்பதன் பேரிலேயே        நான் பாஞ்சாலத்திற்குப்
போகிறேன். நான் அங்கே போவது அமைதியை  உண்டாக்குவதற்கே;
அமைதியைக் கெடுப்பதற்காக அல்ல. ஆகையால், இந்த  உத்தரவுக்கு
உடன்பட என்னால் முடியாமல் இருப்பதற்காக வருந்துகிறேன்  என்று
கூறி வண்டியிலிருந்து இறங்க மறுத்து விட்டேன்.

     கடைசியாக ரெயில்        பால்வாலை அடைந்தது. மகாதேவ்
என்னுடன் இருந்தார். டில்லிக்கு நேரே போய்,      என்ன நடந்தது
என்பதைச் சுவாமி சிரத்தானந்தஜியிடம்  கூறி, மக்களை அமைதியாக
இருக்கும்படிக் கேட்டுக்கொள்ளுமாறு      அவருக்குச் சொன்னேன்.
எனக்குப் பிறப்பித்த உத்தரவை மீறி,   மீறியதற்குரிய தண்டனையை
ஏற்றுக்கொள்ள நான் முடிவு செய்தேன் என்பதையும், எனக்கு எந்தத்
தண்டனை விதிக்கப்பட்டாலும்,          ஜனங்கள் மாத்திரம் பூரண
அமைதியுடன் இருந்து வருவார்களானால் அதுவே நமக்கு வெற்றியை
அளிக்கும் என்பதையும் மக்களுக்கு       அவர் விளக்கிச் சொல்ல
வேண்டும் என்றும் கூறினேன்.

     பால்வால் ரெயில்வே ஸ்டேஷனில்    என்னை ரெயிலிலிருந்து
இறக்கிப் போலீஸ்             பாதுகாப்பில் வைத்தார்கள். கொஞ்ச
நேரத்திற்கெல்லாம் டில்லியிலிருந்து    ரெயில் வந்தது. என்னை ஒரு
மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏற்றினார்கள்.    போலீஸ் கோஷ்டியும்
என்னுடன் வந்தது.     மதுராவை அடைந்ததும் என்னைப் போலீஸ்
முகாமுக்குக் கொண்டு போனார்கள்.      என்னை என்ன செய்யப்
போகிறார்கள், என்னை அடுத்தபடி       எங்கே கொண்டு போகப்
போகிறார்கள் என்பதைச் சொல்ல எந்தப்   போலீஸ் அதிகாரியாலும்
முடியவில்லை. அடுத்த நாள்          காலை 4 மணிக்கு என்னை
எழுப்பினார்கள். பம்பாயை        நோக்கிப் போய்க் கொண்டிருந்த
சாமான்கள் ரெயில்    ஒன்றில் என்னை ஏற்றினார்கள். மத்தியானம்
சாவாய் மாதப்பூரில் என்னை இறக்கினர்.     லாகூரிலிருந்து மெயில்
ரெயிலில் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்   ஸ்ரீ பௌரிங், இப்பொழுது
என்னைக் கண்காணிப்பதை ஏற்றுக்கொண்டார்.  அவரோடு என்னை
முதல் வகுப்பு வண்டியில் ஏற்றினார்கள். நான்     சாதாரணக் கைதி
என்பதிலிருந்து ‘பெரிய மனித’க்       கைதி ஆகிவிட்டேன். அந்த
அதிகாரி, ஸர் மைக்கேல் ஓட்வியரைக் குறித்து நீண்ட  புகழ் மாலை
பாட        ஆரம்பித்துவிட்டார்.     ஸர் மைக்கேலுக்கு என் மீது
எந்தவிதமான விரோதமும் இல்லை என்றும், பாஞ்சாலத்திற்குள் நான்
போனால் அங்கே அமைதி