பக்கம் எண் :

558சத்திய சோதனை

Untitled Document
கெட்டுவிடும் என்றுதான்    அவர் பயப்படுகிறார் என்றும் கூறினார்.
இன்னும் ஏதேதோ சொன்னார். கடைசியாகப் பம்பாய்க்குத் திரும்பிப்
போய்விட       நானாகவே ஒப்புக்கொண்டு விடுவதோடு பாஞ்சால
எல்லையைத் தாண்டி          உள்ளே வருவதில்லை என்பதற்குச்
சம்மதிக்கும்படியும் அந்த அதிகாரி என்னைக் கேட்டுக்  கொண்டார்.
அந்த உத்தரவுக்கு நான்       உடன் பட்டுவிட முடியாது என்றும்,
நானாகத்         திரும்பிப் போய் விடவும் தயாராயில்லை என்றும்
அவருக்குப் பதில் சொன்னேன்.     அதன் பேரில் அந்த அதிகாரி,
வேறு வழியில்லாது போகவே     என் மீது சட்டத்தை அமுலுக்குக்
கொண்டு வந்ததாக        வேண்டி இருக்கிறது என்றார். “என்னை
என்னதான் செய்யப் போகிறீர்கள்?” என்று   அவரைக் கேட்டேன்.
அது தமக்கே தெரியவில்லை என்றும்,        மேற்கொண்டு வரும்
உத்தரவை எதிர்பார்ப்பதாகவும் அவர்  சொன்னார். “தற்போதைக்கு
உங்களை          நான் பம்பாய்க்கு        அழைத்துப் போய்க்
கொண்டிருக்கிறேன்” என்றார்.

     நாங்கள் சூரத் போய்ச் சேர்ந்தோம்.       அங்கே என்னை
மற்றொரு போலீஸ் அதிகாரியிடம்        ஒப்படைத்தனர். நாங்கள்
பம்பாயை அடைந்ததும், “இனி நீங்கள்     உங்கள் இஷ்டம்போல்
போகலாம்” என்று அந்த        அதிகாரியே என்னிடம் கூறினார்.
“ஆனால், நீங்கள்        மாரின் லயன்ஸ் ஸ்டேஷனுக்கு அருகில்
இறங்கிவிடுவது நல்லது   உங்களுக்காக அங்கே ரெயில் நிற்கும்படி
செய்கிறேன். கொலாபாவில் பெருங்கூட்டம் இருக்கக்கூடும்” என்றும் கூறினார். அவர்            விருப்பப்படியே செய்வதில் எனக்குச்
சந்தோஷம்தான் என்று அவருக்குச் சொன்னேன். அவரும் மகிழ்ச்சி
அடைந்தார். எனக்கு நன்றியும் கூறினார். அவர்  யோசனைப்படியே
நான் மாரின் லயன்ஸ் ஸ்டேஷனில் இறங்கினேன். அப்பொழுதுதான்
ஒரு நண்பரின் வண்டி அப்பக்கமாகப் போயிற்று. அந்த வண்டியில்
ஏறி ரேவாசங்கர ஜவேரியின் வீடு    சேர்ந்தேன்.     நான் கைது
செய்யப்பட்ட செய்தி பொது மக்களுக்கு      ஆத்திரத்தை மூட்டி
அவர்களை வெறி கொண்டவர்களாகச் செய்திருக்கிறது என்று அந்த
நண்பர்   கூறினார். “பைதுனிக்கு அருகில் எந்த நேரத்திலும் கலகம்
மூண்டுவிடக் கூடும் என்று பயப்படுகிறார்கள்.     மாஜிஸ்டிரேட்டும்
போலீஸாரும் இதற்குள்ளாகவே அங்கே   போய்விட்டனர்!” என்றும்
அவர் கூறினார்.

     நான் ரேவாசங்கரின்             வீடு போய்ச் சேர்ந்ததுமே,
உமார் ஸோபானியும் அனுசூயா பென்னும்   அங்கே வந்து, உடனே
பைதுனிக்கு மோட்டாரில் வருமாறு அழைத்தனர்.    “பொது மக்கள்
பொறுமை இழந்துபோய் அதிக    ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள்.
அவர்களைச் சாந்தப்படுத்த எங்களால் முடிய