பக்கம் எண் :

மறக்கமுடியாத அந்த வாரம்! -2561

Untitled Document
     “இதில்தான் உங்கள் கருத்துக்கு        நான் மாறுபடுகிறேன்.
பொதுஜனங்கள் இயற்கையாகவே    அமைதியானவர்களே அன்றிப்
பலாத்கார சுபாவம் உடையவர்கள் அல்ல” என்றேன்.

     இவ்வாறு நீண்ட நேரம் விவாதித்தோம்.    முடிவாகக் கிரிபித்,
“உங்கள் போதனைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை என்பதை
நீங்கள் நிச்சயமாகத்     தெரிந்துகொள்ளுகிறீர்கள் என்று வைத்துக்
கொள்ளுவோம். அப்பொழுது என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.

     “எனக்கு நிச்சயமாகத் தெரிந்தால் சாத்விகச்   சட்ட மறுப்பை
நான் நிறுத்தி வைத்துவிடுவேன்” என்றேன்.

     “அப்படியா சொல்லுகிறீர்கள்?    நீங்கள் விடுதலையானதுமே
பாஞ்சாலத்திற்குப்        போவீர்கள் என்று    ஸ்ரீ பௌரிங்கிடம்
கூறினீர்களே” என்று ஸ்ரீ கிரிபித் கேட்டார்.

     “ஆம். அடுத்த ரெயிலிலேயே   புறப்பட்டுவிட விரும்பினேன்.
ஆனால், இன்று அது ஆகாத காரியம்.”

     “நீங்கள்         பொறுமையுடன் இருப்பீர்களாயின், உங்கள்
போதனைகளை மக்கள் கேட்கவில்லை என்ற நிச்சயம் உங்களுக்குக்
கட்டாயம் ஏற்படும்.     அகமதாபாத்தில் என்ன நடக்கிறது என்பது
உங்களுக்குத் தெரியுமா? அமிர்தசரஸில்    என்ன நடந்திருக்கிறது?
எல்லா இடங்களிலுமே  மக்கள் வெறி கொண்டுவிட்டார்கள். எல்லா
விவரங்களும் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை. சில இடங்களில்
தந்திக்           கம்பிகள்     அறுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக்
கலவரங்களுக்கெல்லாம் பொறுப்பு உங்களையே சாரும் என்று நான்
உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார், ஸ்ரீ கிரிபித்.

     அதற்கு நான் பின்வருமாறு கூறினேன்:      “அவ்வாறு நான்
கண்டால், அதன்           பொறுப்பைத் தயங்காமல் நான் ஏற்றுக்
கொள்ளுவேன் என்று உங்களுக்கு உறுதி     கூறுகிறேன். ஆனால்,
அகமதாபாத்தில் கலவரங்கள் நடந்தன என்று நான் கண்டால் மிகவும்
மனவேதனை அடைவதோடு ஆச்சரியமும் படுவேன். அமிர்தசரஸில்
நடந்ததுபற்றி நான் எதுவும் சொல்லுவதற்கில்லை.     அங்கே நான்
போனதே இல்லை.        அங்கே யாருக்கும் என்னைத் தெரியாது.
ஆனால், பாஞ்சாலத்தைப் பற்றியும்     கூட ஒரு விஷயத்தை நான்
நிச்சயமாக அறிவேன். பாஞ்சாலத்திற்குள் நான் போவதைப் பாஞ்சால
அரசாங்கம் தடுக்காமல்      இருந்திருக்குமாயின், அங்கே அமைதி
நிலவும்படி செய்வதற்கு நான் பெருமளவு உதவியாக இருந்திருப்பேன்.
என்னைத் தடுத்ததன் மூலம் அனாவசியமாக மக்களுக்கு  ஆத்திரம்
மூட்டிவிட்டார்கள்.”

     இவ்விதம்  மேலும் மேலும் விவாதித்துக்கொண்டே போனோம்.
இருவர் கருத்தும்         ஒத்துப்போவதற்குச் சாத்தியமே இல்லை.
சௌபாத்தியில் ஒரு        பொதுக்கூட்டத்தில் பேசி, அமைதியாக