பக்கம் எண் :

562சத்திய சோதனை

Untitled Document
இருக்குமாறு மக்களைக்   கேட்டுக்கொள்ளுவது என்று இருக்கிறேன்
என்று அவரிடம் கூறிவிட்டு          விடை பெற்றுக் கொண்டேன்.
சௌபாத்திக் கடற்கரையில் பொதுக் கூட்டம் நடந்தது. அகிம்சையின்
கடமையைக் குறித்தும், சத்தியாக்கிரகத்தின் எல்லைகளைக் குறித்தும்,
விரிவாக எடுத்துக் கூறினேன்.       “முக்கியமாகச் சத்தியாக்கிரகம்
உண்மையோடிருப்பவர்களுக்கே           ஆயுதம். சத்தியாக்கிரகி,
அகிம்சையை அனுசரிக்கப் பிரதிக்ஞை    செய்துகொண்டிருக்கிறான்.
இதை மக்கள்             எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும்
அனுசரித்தாலன்றிப் பொதுஜன      சத்தியாக்கிரகத்தை நான் நடத்த
முடியாது” என்றும் சொன்னேன்.

     அகமதாபாத்தில்     கலவரங்கள்       நடந்ததாக அனுசூயா
பென்னுக்கும் செய்திகள் கிடைத்தன.      அவரையும் கைது செய்து
விட்டார்கள் என்று யாரோ வதந்தியைக்  கிளப்பி விட்டார்கள். அவர்
கைதானார் என்ற வதந்தியைக் கேட்டு மில்   தொழிலாளர்கள் வெறி
கொண்டு வேலை நிறுத்தம் செய்ததோடு பலாத்காரச் செயல்களையும்
செய்து விட்டார்கள். ஒரு சார்ஜண்டு      அடித்துக் கொல்லப்பட்டு
விட்டார்.

     நான் அகமதாபாத்துக்குச் சென்றேன்.     நதியாத் ரெயில்வே
ஸ்டேஷனுக்கு அருகில்        தண்டவாளங்களைப் பெயர்த்துவிட
முயற்சிகள் நடந்தன என்றும், வீரம்காமில்      அரசாங்க அதிகாரி
ஒருவர் கொல்லப்பட்டார் என்றும், அகமதாபாத்தில் ராணுவச் சட்டம்
அமுலுக்குக்      கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும் அறிந்தேன்.
பொதுஜனங்கள்          பயப்பிராந்தியில் இருந்தனர். பலாத்காரச்
செயல்களில் அவர்கள் ஈடுபட்டு விட்டார்கள்.   அவர்கள் அதற்கு
வட்டியும் சேர்த்து அனுபவிக்கும்படி செய்யப்பட்டுவிட்டனர்.

     கமிஷனர் ஸ்ரீ பிராட்டிடம் என்னை     அழைத்துக்கொண்டு
போவதற்காக ஒரு போலீஸ் அதிகாரி        ஸ்டேஷனில் காத்துக்
கொண்டிருந்தார்.             கோபத்தினால் அவர்  துடிதுடித்துக்
கொண்டிருந்ததைக் கண்டேன். அவரிடம் சாந்தமாகவே பேசினேன்.
நடந்துவிட்ட கலவரங்களுக்காக என் வருத்தத்தையும்  தெரிவித்துக்
கொண்டேன்.      ராணுவச் சட்டம் அனாவசியமானது என்று நான்
சொன்னதோடு,               அமைதியை நிலை நாட்டுவதற்கான
முயற்சிகளிலெல்லாம் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன்  என்றும்
சொல்லி, சபர்மதி ஆசிரம மைதானத்தில்   ஒரு பொதுக்கூட்டத்தை
நடத்த          அனுமதிக்கும்படியும் கேட்டேன். இந்த யோசனை
அவருக்குப் பிடித்திருந்தது. பொதுக்கூட்டமும் நடந்தது. அது ஏப்ரல்
13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை   என்று நினைக்கிறேன். அன்றோ,
அதற்கு மறுநாளோ,        ராணுவச் சட்ட ஆட்சியும் ரத்தாயிற்று.
பொதுக்கூட்டத்தில் பேசுகையில் மக்கள் தாங்கள்