பக்கம் எண் :

மறக்கமுடியாத அந்த வாரம்! -2563

Untitled Document
செய்து விட்ட        தவறை     உணரும்படி செய்ய முயன்றேன்.
அவர்களுடைய செய்கைகளுக்குப் பிராயச்சித்தமாக  மூன்று நாட்கள்
உண்ணாவிரதம்       இருக்கப்போகிறேன்  என்றும் தெரிவித்தேன்.
அதேபோல் ஒரு நாளைக்கு உண்ணாவிரதம் இருக்குமாறு மக்களைக்
கேட்டுக்கொண்டேன். பலாத்காரச் செயல்களைச் செய்துவிட்டவர்கள்,
தங்களுடைய குற்றத்தை        ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும்
அவர்களுக்கு யோசனை கூறினேன்.

     என்னுடைய கடமை என்ன என்பது      பட்டப்பகல் போல்
எனக்கு விளங்கியது. அகமதாபாத்    தொழிலாளர்களிடையே நான்
அதிக காலம் செலவிட்டிருக்கிறேன்.     அவர்களுக்குச் சேவையும்
செய்திருக்கிறேன். அவர்களிடமிருந்து    சிறந்த காரியங்களை நான்
எதிர்பார்த்திருக்கும் போது,      அத்தொழிலாளர்கள் கலகங்களில்
ஈடுபட்டது என்னால்     சகிக்க முடியாததாயிற்று. அவர்களுடைய
குற்றத்தில் எனக்கும்        பங்கு உண்டு என்பதை உணர்ந்தேன்.

     மக்கள் தாங்கள் செய்துவிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட
வேண்டும் என்று அவர்களுக்கு நான்          கூறியதுபோலவே,
அக்குற்றங்களை மன்னித்து விடுமாறு அரசாங்கத்திற்கும் யோசனை
கூறினேன். இரு சாரரும் என் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை.

     காலஞ்சென்ற ஸர் ராமாபாயும்,     அகமதாபாத் நகரவாசிகள்
சிலரும், என்னிடம் வந்து சத்தியாக்கிரகத்தை  நிறுத்தி வைக்குமாறு
என்னைக்           கேட்டுக்கொண்டார்கள். அமைதியின்மையின்
படிப்பினையை மக்கள்             அறிந்துகொள்ளும் வரையில்
சத்தியாக்கிரகத்தை நிறுத்தி வைப்பதென்று நான்     தீர்மானித்துக்
கொண்டு விட்டதால், அவர்களுடைய         வேண்டுகோளுக்கே
அவசியமில்லை. அந்த நண்பர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பினர்.

     ஆனால், நான் செய்துவிட்ட     இத்தீர்மானத்தைக் குறித்துத்
துக்கப்பட்டவர்களும் உண்டு. எல்லா      இடங்களிலுமே அமைதி
நிலவவேண்டும் என்று நான்    எதிர்பார்த்தால், சத்தியாக்கிரகத்தை
ஆரம்பிப்பதற்கு முன்னால் இருந்தாக வேண்டிய நிபந்தனை  என்று
நான் அதைக் கருதுவதானால், பொதுஜன சத்தியாக்கிரகம்  என்பதே
அசாத்தியமானதாகிவிடும்     என்று      அவர்கள் கருதினார்கள்.
அவர்களுடன் மாறுபட்ட கருத்தை                நான் கொள்ள
வேண்டியிருந்ததற்காக வருந்தினேன். நான்       யாருடன் இருந்து
வேலை செய்து வந்தேனோ அவர்கள், அகிம்சைக்கும் துன்பங்களை
அனுபவிப்பதற்கும்               தயாராயிருப்பார்கள் என்று நான்
எதிர்பார்த்தவர்களே,                அகிம்சையை   அனுசரிக்க
முடியவில்லையென்றால்,             சத்தியாக்கிரகம் நிச்சயமாகச்
சாத்தியமில்லாததே. சத்தியாக்கிரகத்திற்கு மக்களை நடத்திச்  செல்ல
விரும்புகிறவர்கள், அகிம்சையின் குறிப்பிட்ட எல்லைக்குள் மக்களை
வைக்க முடிந்தவர்களாக        இருக்க வேண்டும் என்பதில் நான்
உறுதியான