பக்கம் எண் :

580சத்திய சோதனை

Untitled Document
இந்தியர் குறைகளைக் குறித்தும்     எடுத்துக் கூறி வந்தேன். இந்த
ஆண்டு அதைவிட நான் அதிகமாக       எதுவும் செய்ய வேண்டி
இருக்கும் என்றும் நான் எதிர்     பார்க்கவில்லை. ஆனால், இதற்கு
முன்னால் அநேக சமயங்களில்        நேர்ந்திருப்பதைப் போன்றே
இச்சமயமும் பொறுப்பான வேலை எனக்கு வந்து சேர்ந்தது.

     புதிய அரசியல்        சீர்திருத்தங்களைக் குறித்து மன்னரின்
அறிவிப்பு அப்பொழுதுதான்     வெளியாயிற்று. எனக்குக் கூட அது
முற்றும் திருப்தியளிப்பதாக இல்லை. மற்றவர்கள் ஒவ்வொருவருக்கும்
அது திருப்தியை அளித்தது.         அளிக்கப்பட்ட சீர்திருத்தங்கள்
குறைபாடுடையவைகளேயாயினும்    ஏற்றுக் கொள்ளக் கூடியவையே
என்று   அச்சமயம் நான் எண்ணினேன். மன்னரின் அறிக்கையிலும்,
அதன் பாஷையிலும் லார்டு சின்ஹாவின்     கைத்திறன் இருப்பதாக
எனக்குத் தோன்றியது. இது எனக்குச்    சிறிதளவு நம்பிக்கையையும்
அளித்தது. ஆனால், காலஞ்சென்ற        லோகமான்யர், தேசபந்து
சித்தரஞ்சன்தாஸ் போன்ற       அனுபவமுள்ள தீரர்களோ, அந்தச்
சீர்திருத்தங்கள்   ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல என்று தலையை
அசைத்து விட்டார்கள். பண்டித மாளவியாஜி நடுநிலைமை வகித்தார்.

     பண்டித மாளவியாஜி, தமது      சொந்த அறையிலேயே நான்
தங்கும்படி செய்தார்.           ஹிந்து சர்வகலாசாலை அஸ்திவார
விழாச்சமயம் அவருடைய எளிய வாழ்க்கையைக்     குறித்து நான்
கொஞ்சம்         தெரிந்து கொண்டிருந்தேன். ஆனால், இச்சமயம்
அவருடைய அறையிலேயே          அவருடன் இருந்து வந்ததால்,
அவருடைய அன்றாட வாழ்க்கை முறையை        மிக நுட்பமாகக்
கவனிக்க           என்னால் முடிந்தது. நான் கண்டவை, எனக்கு
ஆனந்தத்தையும்          ஆச்சரியத்தையும் அளித்தன. ஏழைகள்
எல்லோரும் தாராளமாக வந்து   இருக்கக்கூடிய தரும சத்திரத்தைப்
போன்றே அவரது அறைகாட்சி அளித்தது.    அந்த அறையில் ஓர்
இடத்திலிருந்து         மற்றோர் இடத்திற்குப் போய் விடமுடியாது.
உள்ளே அவ்வளவு கூட்டம்.     எந்த நேரத்திலும் யாவரும் அவர்
அறைக்குள் போகலாம். விரும்பும் வரையில் அவருடன்  தாராளமாக
பேசிக்கொண்டிருந்து விட்டுப் போகலாம்.     இந்த அறையின் ஒரு
மூலையில்          என்னுடைய சார்ப்பாய் (நார்க் கட்டில்) மிகவும்
கம்பீரமாகக் கிடந்தது.        ஆனால், மாளவியாஜியின் வாழ்க்கை
முறையை இந்த அத்தியாயத்தில்        நான் வர்ணித்துக்கொண்டு
இருப்பதற்கில்லை.           நான் கூற வந்த விஷயத்திற்கே நான்
திரும்பவேண்டும்.

     இவ்வாறு தினமும் மாளவியாஜியுடன்    நான் பழக முடிந்தது.
ஒரு          மூத்த சகோதரரைப் போன்று அவர், பலதரப் பட்ட
கட்சியினரின் கருத்துக்களையும் அன்போடு      எனக்கு விளக்கிச்