பக்கம் எண் :

அமிர்தசரஸ் காங்கிரஸ்581

Untitled Document
சொல்லி வந்தார்.   அரசியல் சீர்திருத்தத்தைப் பற்றிய தீர்மானத்தின்
மீது மகாநாட்டின்      நடவடிக்கைகளில் நான் கலந்து கொண்டாக
வேண்டியது   தவிர்க்க முடியாதது என்பதைக் கண்டேன். பாஞ்சால
அட்டூழியங்களைக் குறித்த காங்கிரஸின் அறிக்கையைத்  தயாரிக்கும்
பொறுப்பில் நானும் பங்கு    கொண்டிருந்ததால், அதன் சம்பந்தமாக
இனி மேல் செய்ய வேண்டியவைகளையும்   நான் கவனித்தே ஆக
வேண்டும்         என்பதை உணர்ந்தேன்.     அது சம்பந்தமாக
அரசாங்கத்துடன் விவகாரம்    நடத்தியாக வேண்டும். அதே போல
கிலாபத் பிரச்னையும் இருந்தது. மேலும் ஸ்ரீ மாண்டேகு, இந்தியாவின்
லட்சியத்திற்குத் துரோகம்              செய்ய மாட்டார். துரோகம்
செய்யப்படுவதற்கு அனுமதிக்கமாட்டார் என்றும்    அச்சமயம் நான்
நம்பியிருந்தேன். அலி சகோதரர்களும் மற்ற  கைதிகளும் விடுதலை
செய்யப்பட்டது நல்ல சகுணம் என்றும் எனக்குத் தோன்றியது. இந்த
நிலைமையில் அரசியல்          சீர்திருத்தங்களை நிராகரிக்காமல்
ஏற்றுக்கொள்ளும்       தீர்மானத்தைச் செய்வதே சரியான காரியம்
என்றும் எண்ணினேன். ஆனால்,    தேசபந்து சித்தரஞ்சன் தாஸோ,
அரசியல் சீர்திருத்தங்கள் போதுமானவை அல்ல, திருப்திகரமானவை
அல்ல என்று       அடியோடு நிராகரித்து விடவேண்டியதே என்ற
கருத்தில் உறுதியுடன் இருந்தார்.     காலஞ்சென்ற லோகமான்யரோ,
அநேகமாக         நடுநிலைமையே வகித்தார். ஆனால், தேசபந்து
அங்கீகரிக்கும் எந்தத் தீர்மானத்திற்கும் சாதகமாகத் தமது ஆதரவை
அளித்துவிடுவதென்றும் தீர்மானித்திருந்தார்.

     இத்தகைய அனுபவமுள்ள,       நீண்ட காலம் சிறந்த தேசத்
தொண்டாற்றி மக்களின்      மதிப்பைப் பெற்றிருந்த தலைவர்களின்
கருத்துக்கு மாறான கருத்தை நான்   கொள்ளுவது என்ற எண்ணமே
என்னால் சகிக்க முடியாததாக இருந்தது. ஆனால்,  அதே சமயத்தில்
என்னுடைய மனச்சாட்சியின் குரலும் எனக்குத் தெளிவாக ஒலித்தது.
காங்கிரஸிலிருந்து           ஓடிப் போய்விடவே நான் முயன்றேன்.
காங்கிரஸில்        இனி  நடக்கவிருக்கும் நடவடிக்கைகளில் நான்
கலந்துகொள்ளாது இருந்து விடுவதே    எல்லோருக்கும் நன்மையாக
இருக்கும் என்று பண்டித  மாளவியாஜியிடமும் மோதிலால்ஜியிடமும்
சொன்னேன்.            அவ்வாறு நான் செய்தால், மதிப்பிற்குரிய
தலைவர்களுக்கு மாறான கருத்தை நான் காட்டிக்கொள்ளுவதிலிருந்து
நான் காப்பாற்றப்பட்டவனும் ஆவேன் என்றேன்.

     ஆனால், என் யோசனையை         இவ்விரு தலைவர்களும்
அங்கீகரிக்கவில்லை. என்னுடைய இந்த யோசனை எப்படியோ லாலா
ஹரிகிருஷ்ண லாலின்    காதுகளுக்கும்   எட்டிவிட்டது. “அப்படிச்
செய்யவே கூடாது. பாஞ்சாலத்தினரின் உணர்ச்சிகளை