பக்கம் எண் :

582சத்திய சோதனை

Untitled Document
அது மிகவும் புண்படுத்தும்” என்றார் அவர்.     இவ் விஷயத்தைக்
குறித்து லோகமான்யர், தேசபந்து,    ஸ்ரீ ஜின்னா ஆகியவர்களுடன்
விவாதித்தேன். ஆனால்,     எந்த வழியையும் காண முடியவில்லை.
முடிவாக என் துயர  நிலைமையை      மாளவியாஜியிடம் எடுத்துக்
கூறினேன்.         “சமரசம் ஏற்படும் என்பதற்கான எதையும் நான்
காணவில்லை. என் தீர்மானத்தை      நான் கொண்டு வருவதாயின்,
அதன்மீது வாக்கெடுக்க வேண்டிவரும். ஆனால், அதற்கு வேண்டிய
ஏற்பாடு எதுவும் அங்கிருப்பதாக நான்     காணவில்லை. காங்கிரஸ்
மகாநாட்டில் இதுவரையில்     கை தூக்கச் சொல்லி வாக்கெடுக்கும்
முறையே      அனுசரிக்கப்பட்டு வந்திருக்கிறது. பிரதிநிதிகளுக்கும்,
மகாநாட்டை வேடிக்கை      பார்க்க வந்திருப்பவர்களுக்கும் உள்ள
வித்தியாசங்களெல்லாம்    அப்பொழுது போய்விடுவதும் வழக்கமாக
இருந்து வந்திருக்கிறது. இத்தகைய பெரிய கூட்டங்களில் வாக்குகளை
எண்ணுவதற்கான சாதனங்களும் நம்மிடம் இல்லை.  வோட்டு எடுக்க
வேண்டும் என்று நான் விரும்பினாலும், அதற்கு வேண்டிய  வசதியும்
நம்மிடம் இல்லை, அதில் அர்த்தமும் இல்லை”  என்று சொன்னேன்.
லாலா ஹரிகிருஷ்ண லாலே இதில்     கை கொடுக்க முன் வந்தார்.
வேண்டிய ஏற்பாடுகளைத் தாம்      செய்வதாக ஒப்புக் கொண்டார்.
“வாக்கெடுக்கும்             தினத்தன்று,     வேடிக்கை பார்க்க
வந்திருப்பவர்களைக்            காங்கிரஸ்            பந்தலில்
அனுமதிக்கமாட்டோம். வாக்குகளை எண்ணிக்     கணக்கிடுவதைப்
பொறுத்த வரையில் நான் கவனித்துக்    கொள்ளுகிறேன். ஆனால்,
நீங்கள் மாத்திரம் காங்கிரஸு க்கு வராமல்   இருந்து விடக் கூடாது”
என்றார், அவர்.

     நான் உடன்பட்டேன். என்      தீர்மானத்தைத் தயாரித்தேன்.
உள்ளத்தில் நடுங்கிக்கொண்டே அதைப் பிரேரிக்கவும் முற்பட்டேன்.
பண்டித மாளவியாஜியும்         ஸ்ரீ ஜின்னாவும் அதை ஆதரிக்க
இருந்தனர். எங்களுடைய கருத்து      வேற்றுமையில் மனக்கசப்பு
என்பது ஒரு சிறிதேனும் இல்லாமல்  இருந்த போதிலும், நியாயத்தை
எடுத்துக் கூறியதைத் தவிர எங்கள் பிரசங்கங்களில் வேறு எதுவுமே
இல்லையென்றாலும்,      அபிப்பிராய பேதம் இருக்கிறது என்பதை
மக்கள் சகிக்கவே இல்லை. அது      அவர்களுக்கு வேதனையை
அளித்தது என்பதைக் கண்டேன். பூரணமான      ஒற்றுமையையே
அவர்கள் விரும்பினார்கள்.

     ஒரு பக்கம்        பிரசங்கங்கள் செய்யப்பட்டு வந்த அதே
சமயத்தில்    மற்றொரு பக்கத்தில், அபிப்பிராய பேதத்தில் சமரசம்
செய்து வைப்பதற்கு மேடையில்      முயற்சிகள் நடந்து கொண்டு
வந்தன. அதற்காக, தலைவர்கள் தங்கள்   தங்கள் கருத்துக்களைத்
தாராளமாகப்           பரிமாறிக்கொண்டு வந்தனர். ஒற்றுமையை
உண்டாக்குவதற்கு மாளவியாஜி எல்லா    முயற்சிகளையும் செய்து
வந்தார். அச்சமயத்தில்