பக்கம் எண் :

590சத்திய சோதனை

Untitled Document
பஞ்சைக்    கங்கா பென்னுக்கு அனுப்பினேன். உடனே, நூற்ற நூல்
ஏராளமாக வந்து குவியத் தொடங்கிவிட்டது.   அந்த நூலை என்ன
செய்வது என்பது பிறகு ஒரு பிரச்னையாகி விட்டது.

     ஸ்ரீ உமார் ஸோபானி       மிகுந்த            தாராளமான
குணமுடையவர்தான். ஆனால்,           அவருடைய தாராளத்தை
எப்பொழுதுமே     பயன்படுத்திக் கொண்டிருப்பது என்பது கூடாது.
பட்டை      போட்ட பஞ்சைத் தொடர்ந்து அவரிடமிருந்து வாங்கிக்
கொண்டிருப்பதென்பது என்மனத்திற்குக் கஷ்டமாக இருந்தது. மேலும்,
மில்லில் தயாரான      இப்பஞ்சை    உபயோகித்துக் கொள்ளுவது
அடிப்படையிலேயே தவறு என்றும்   எனக்குத் தோன்றிற்று. மில்லில்
பட்டை போட்ட பஞ்சை    உபயோகிக்கலாமென்றால் மில் நூலையே
ஏன்      உபயோகித்துக் கொள்ளக்கூடாது? முன் காலத்திலெல்லாம்
கைராட்டையில் நூற்றவர்கள்,    வேண்டிய பஞ்சை பட்டை போட்டு
எவ்வாறு தயாரித்துக் கொண்டு  வந்தார்கள்? என் மனத்தில் எழுந்த
இத்தகைய எண்ணங்களோடு      கங்காபென்னுக்கு ஒரு யோசனை
கூறினேன். பஞ்சு          அடித்துப் பட்டை போட்டுக் கொடுக்கக்
கூடியவர்களைக் கண்டுபிடிக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன்.
அவரும் நம்பிக்கையோடு அவ்வேலையை ஏற்றுக் கொண்டார். பஞ்சு
கொட்டிப் பட்டை           போட்டுத் தரக்கூடிய ஒருவரை அவர்
அமர்த்தினார்.                அந்த ஆசாமியோ, தமக்கு அதிகம்
கொடுக்காவிட்டாலும்        மாதம் முப்பத்தைந்து ரூபாய் கொடுக்க
வேண்டும் என்றார்.    அந்தச் சமயத்தில் அதற்கு எவ்வளவு பணம்
கொடுத்தாலும்      அதிகம் அல்ல என்று எண்ணினேன். கொட்டிய
பஞ்சிலிருந்து பட்டை போடுவதற்குச்        சில இளைஞர்களையும்
கங்கா பென் பழக்கினார். யாராவது பஞ்சு கொடுத்து உதவ வேண்டும்
என்று பம்பாயில் கொடுக்க முன்வந்தார். இவ்விதம் கங்கா பென்னின்
முயற்சி    எதிர்பார்த்ததற்கு மேலாகவே பலன் தந்தது. வீஜாப்பூரில்
தயாரான நூலை நெய்வதற்கும்    நெசவாளர்களுக்கு அவர் ஏற்பாடு
செய்தார். சீக்கிரத்தில்    வீஜாப்பூர்க் கதர், புகழ்பெற்று விளங்கியது.

     வீஜாப்பூரில் இந்த           அபிவிருத்திகளெல்லாம் நடந்து
கொண்டிருந்த சமயத்தில் ஆசிரமத்திலும்   கைராட்டினம் துரிதமாக
நிலைபெற்று வந்தது. மகன்லால் காந்தி,    தமக்குள்ள யந்திர நுட்ப
ஆற்றலையெல்லாம்               பயன்படுத்தி ராட்டினத்தில் பல
அபிவிருத்திகளைச் செய்தார்.    ராட்டினத்தின் சக்கரத்தையும் மற்ற
சாமான்களையும் ஆசிரமத்திலேயே        தயாரிக்க ஆரம்பித்தார்.
ஆசிரமத்தில் தயாரான முதல் கதர், கெஜம் 17 அணா விலையாயிற்று.
அதிக முரடாயிருந்த              இந்தக் கதரை அந்த விலைக்கு
நண்பர்களுக்குச் சிபாரிசு செய்ய          நான் தயங்கவே இல்லை.
அவர்களும்    மனமுவந்து            அவ்விலையைக் கொடுத்து
வாங்கிக்கொண்டார்கள்.

     நான் பம்பாயில்  படுத்த படுக்கையாக இருந்தேன். என்றாலும்,