பக்கம் எண் :

முடிவில் கண்டுகொண்டேன் 591

Untitled Document
அங்கேயும் ராட்டினங்களைத் தேடுவதற்கு  வேண்டிய சக்தி எனக்கு
இருந்தது. கடைசியாக நூல்           நூற்கக்கூடியவர்கள் இருவர்
தென்பட்டனர். ஒரு சேர், அதாவது 28      தோலா அல்லது சுமார்
முக்கால் ராத்தல் நூலுக்கு ஒரு ரூபாய்   விலை கொடுக்க வேண்டும்
என்று அவர்கள் கேட்டார்கள். கதரின் பொருளாதாரத் தத்துவத்தைக்
குறித்து அப்பொழுது எனக்கு எதுவுமே தெரியாது. கையினால் நூற்ற
நூலுக்கு என்ன      விலையும் கொடுக்கலாம் என்று எண்ணினேன்.
வீஜாப்பூரில் கொடுக்கப்படும்         விலையையும் நான் கொடுத்த
விலையையும்     ஒப்பிட்டுப் பார்த்தபோது நான் ஏமாற்றப்பட்டேன்
என்பதைக் கண்டேன்.      நூற்றவர்களோ,   விலையில் எதையும்
குறைத்துக்கொள்ள மறுத்து விட்டார்கள்.   ஆகையால், அவர்களை
அனுப்பிவிட வேண்டியதாயிற்று.           என்றாலும், அவர்களை
அமர்த்தியிருந்ததால்,       பயனில்லாது  போகவில்லை. ஸ்ரீமதிகள்
அவந்திகாபாய், ரமீபாய் காம்தார், ஸ்ரீ சங்கர்லால் பாங்கரின் தாயார்,
ஸ்ரீமதி வசுமதி பென் ஆகியவர்களுக்கு   அவர்கள் நூற்கக் கற்றுக்
கொடுத்திருந்தார்கள். என்      அறையில் ராட்டினம் ஆனந்தமாகச்
சுழன்று இனிய கீதத்தை           எழுப்பிக்கொண்டிருந்தது. நான்
நோயினின்றும் குணம் அடைவதற்கு      அந்தக் கீதம் பெருமளவு
துணை செய்தது      என்று நான் கூறினால்,   அது மிகையாகாது.
அதனால், உடலுக்கு ஏற்பட்ட  நன்மையைவிட மனத்திற்கு ஏற்பட்ட
நற்பலன் அதிகம்     என்பதை       ஒப்புக்கொள்ள நான் தயார்.
அப்படியானால், மனிதனின் உடலில் மாறுதலை   உண்டாக்குவதற்கு
மனத்திற்கு அபார சக்தி இருக்கிறது என்பதையே இது  காட்டுகிறது.
நானும் ராட்டையில்    நூற்க ஆரம்பித்தேன்.  ஆனால், அச்சமயம்
நான் அதிகமாக எதுவும் நூற்கவில்லை.

     கையினால் கொட்டித் தயாரித்த       பஞ்சுப் பட்டைகளைச்
சம்பாதிக்கும் பிரச்னை     மீண்டும் பம்பாயிலும் ஏற்பட்டது. பஞ்சு
கொட்டுகிறவர் ஒருவர், பஞ்சு கொட்டும் வில்லுடன், அந்த வில்லின்
நாணிலிருந்து ஒலி எழுப்பிக்கொண்டு    ஸ்ரீ ரேவா சங்கரின் வீட்டு
வழியே தினம் போய்க்கொண்டிருப்பார். அவரைக்       கூப்பிட்டு
அனுப்பினேன். அவரை விசாரித்ததில்     அவர் மெத்தைகளுக்குத்
திணிக்கும் பஞ்சை கொட்டுகிறவர்    என்று தெரிந்தது. நூற்பதற்குப்
பஞ்சுப் பட்டைகள்     போட்டுத் தர அவர் சம்மதித்தார். ஆனால்,
அதிகமாகக் கூலி கேட்டார், என்றாலும் நான் கொடுத்தேன்.இவ்வாறு
நூற்ற நூலைப் பவித்திர       ஏகாதசியன்று    சுவாமிக்கு மாலை
போடுவதற்காகச்       சில      வைஷ்ணவ நண்பர்கள் வாங்கிக்
கொண்டார்கள். ஸ்ரீ சிவ்ஜி,      நூற்கக் கற்றுக்கொடுக்கும் வகுப்பு
ஒன்றைப் பம்பாயில்    ஆரம்பித்தார். இந்தப் பரிசோதனைகளுக்கு
எல்லாம் அதிகப்         பணம் செலவாயிற்று.   ஆனால், கதரில்
நம்பிக்கையுள்ள, தாய்நாட்டிடம் பக்தியுள்ள     தேசாபிமானிகளான