பக்கம் எண் :

அதன் அலை எழுச்சி 597

Untitled Document
இந்த வாதத்தை எதிர்த்த நான்,    பின்னோக்கிப் போகும் இயக்கம்
சம்பந்தமாகத்தான்             இந்தத் தடை பொருந்தும் என்றும்,
முன்னோக்கிப் போகும்  விஷயத்தில்           அதற்குப் போதிய
நம்பிக்கையும் உறுதியும்       நம்மிடம் இருக்குமானால், இத்தகைய
தீர்மானம் செய்வதற்கு கீழ்ப்பட்ட   ஸ்தாபனங்களுக்குப் பூரணமான
தகுதி இருப்பதோடு அப்படிச் செய்வது       அவைகளின் கடமை
என்றும் கூறினேன்.            தாய் ஸ்தாபனத்தின் கௌரவத்தை
அதிகரிப்பதற்குச் செய்யும் முயற்சியை, ஒருவர்     அம்முயற்சியை
தமது சொந்தப் பொறுப்பிலேயே செய்வாராயின்,   அதற்கு அனுமதி
எதுவும் தேவையில்லை என்றும் வாதித்தேன்.       பின்னர் அந்த
யோசனையின் தன்மைமீது விவாதம் நடந்தது. விவாதத்தில் சிரத்தை
முக்கியமாக இருந்ததெனினும்,         ‘இனிய நியாயத்திற்கு’ ஏற்ற
சூழ்நிலையிலேயே விவாதம் இருந்தது. முடிவில்  தீர்மானத்தின் மீது
வாக்கெடுத்தபோது அது மிக அதிக ஆதரவுடன்   நிறைவேறியதாக
அறிவிக்கப்பட்டது. தீர்மானம் வெற்றிகரமாக   நிறைவேறியதற்கு ஸ்ரீ
வல்லபாய்,   ஸ்ரீ அப்பால் தயாப்ஜி ஆகிய இருவரின் செல்வாக்கே
முக்கியமான       காரணமாகும்.       ஸ்ரீ அப்பாஸ் தயாப்ஜியே
அம்மகாநாட்டின் தலைவர்.        அவருடைய ஆதரவு முழுவதும்
ஒத்துழையாமைத் தீர்மானத்திற்குச் சாதகமாகவே இருந்தது.

     இந்த விஷயத்தைக் குறித்து விவாதிப்பதற்காகக் கல்கத்தாவில்
1920 செப்டம்பரில் காங்கிரஸ் விசேஷ    மகாநாட்டைக் கூட்டுவது
என்று அகில இந்தியக்          காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்தது.
அம்மகாநாட்டிற்காகப் பெருமளவில்      முன்னேற்பாடுகளெல்லாம்
நடந்தன. லாலா லஜபதிராயை அம்மகா நாட்டிற்குத்   தலைவராகத்
தேர்ந்தெடுத்தனர். பம்பாயிலிருந்து காங்கிரஸ்,   கிலாபத் ஸ்பெஷல்
ரெயில்கள் சென்றன.     கல்கத்தாவில் பிரதிநிதிகளும், வேடிக்கை
பார்க்க வந்தவர்களும் ஏராளமாகக் கூடியிருந்தார்கள்.

     மௌலானா ஷவுகத் அலி      கேட்டுக்கொண்டதன் பேரில்
ஒத்துழையாமைத்       தீர்மானத்தின் நகலை நான் ரெயிலிலேயே
தயாரித்தேன். அச்சமயம் வரையில் நான்     தயாரிக்க நகல்களில்
‘பலாத்காரமற்ற’ என்ற சொல்லை அநேகமாக       நான் தவிர்த்து
வந்தேன். ஆனால், என்னுடைய  பிரசங்கங்களில் மாத்திரம் அதை
அடிக்கடி       உபயோகித்து வந்தேன். இவ்விஷயத்தைக் குறித்து
உபயோகிக்க வேண்டிய சொற்களை       நான் அப்பொழுதுதான்
சேகரித்துக் கொண்டு வந்தேன். முற்றும் முஸ்லீம்களையே கொண்ட
கூட்டத்திற்குப் ‘பலாத்காரமற்ற’ என்பதற்குச்   சரியான சமஸ்கிருதச்
சொல்லை உபயோகிப்பதினால், நான்        கூறுவதன் பொருளை
அவர்கள்     சரியானபடி அறிந்துகொள்ளும்படி செய்ய முடியாது
என்பதைக் கண்டேன். ஆகையால், அதற்குப் பொருத்தமான வேறு
ஒரு சொல்லை எனக்குக்      கூறும்படி மௌலானா அபுல் கலாம்