பக்கம் எண் :

598சத்திய சோதனை

Untitled Document
ஆஸாத்தைக் கேட்டேன். ‘பா அமன்’      என்ற சொல்லை அவர்
கூறினார். அதேபோல, ஒத்துழையாமைக்கு ‘தர்க்-ஈ-மவாலாத்’ என்ற
சொற்றொடரை உபயோகிக்கலாம் என்று அவர் யோசனை கூறினார்.

     இவ்வாறு ஒத்துழையாமை      என்பதற்குச் சரியான ஹிந்தி,
குஜராத்தி, உருதுச் சொற்றொடர்களைக் கண்டுபிடிப்பதிலேயே நான்
தீவிரமாக ஈடுபட்டிருந்த  சமயத்தில், அந்த முக்கியமான காங்கிரஸ்
மகாநாட்டிற்கு நான் ஒத்துழையாமைத்     தீர்மானத்தைத் தயாரிக்க
வேண்டி வந்தது. அசல் நகலில் ‘பலாத்காரமற்ற’   என்ற சொல்லை
நான் விட்டுவிட்டேன். இவ்வாறு        விட்டுப் போய் விட்டதைக்
கவனிக்காமல், அதே வண்டியில் என்னுடன்     பிராயணம் செய்த
மௌலானா ஷவுகத்      அலியிடம் அந்த நகலைக் கொடுத்தேன்.
அன்றிரவு தவறைக் கண்டுகொண்டேன்.      அச்சகத்திற்கு நகலை
அனுப்புவதற்கு முன்னால்,        விட்டுப் போனதைச் சேர்த்துவிட
வேண்டும் என்ற             செய்தியுடன் காலையில் மகாதேவை
அனுப்பினேன். ஆனால், விட்டுப் போனதைச்   சேர்த்துவிடுவதற்கு
முன்னாலேயே நகல் அச்சாகிவிட்டது என்று      எனக்கு ஞாபகம்.
விஷயாலோசனைக் கமிட்டி, அன்று     மாலையே கூட வேண்டும்.
ஆகையால், அச்சான நகல் பிரதிகளில் அவசியமான திருத்தங்களை
நான் செய்ய வேண்டியிருந்தது.       என்னுடைய நகலுடன் நான்
தயாராக    இல்லாதிருந்திருந்தால், அதிகக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும்
என்பதைப் பின்னால் கண்டுகொண்டேன்.

     என்றாலும், என்            நிலைமை        உண்மையில்
பரிதபிக்கத்தக்கதாகவே        இருந்தது.    இத்தீர்மானத்தை யார்
ஆதரிப்பார்கள், யார் எதிர்ப்பார்கள் என்பதுபற்றி எனக்கு ஒன்றுமே
தெரியவில்லை. லாலா லஜபதிராய்         எந்தவிதமான போக்குக்
கொள்ளுவார் என்பதும் எனக்குத் தெரியாது.       பிரசித்தி பெற்ற
போராட்ட வீரர்கள், போருக்கு     ஆயத்தமாகப் பெருங்கூட்டமாக
வந்து, கல்கத்தாவில் கூடியிருப்பது     ஒன்றையே நான் கண்டேன்.
டாக்டர் பெஸன்ட், பண்டித மாளவியாஜி, ஸ்ரீ விஜயராகவாச்சாரியார்,
பண்டித மோதிலால்ஜி, தேசபந்து ஆகியோர்     அவர்களில் சிலர்.

     பாஞ்சால, கிலாபத் அநியாயங்களுக்குப்     பரிகாரம் தேடிக்
கொள்ளும் நோக்கத்துடன் ஒத்துழையாமையை அனுசரிப்பது என்று
மாத்திரமே என் தீர்மானத்தில்    கண்டிருந்தது. ஆனால், அது ஸ்ரீ
விஜயராகவாச்சாரியாருக்குத்              திருப்தியளிக்கவில்லை.
“ஒத்துழையாமைப்        பிரகடனம் செய்வதென்றால், குறிப்பிட்ட
அநீதிகளைப் பொறுத்ததாக மாத்திரம் அது ஏன் இருக்க வேண்டும்?
நாடு        அனுபவித்துக்கொண்டு வரும் பெரிய அநீதி, அதற்குச்
சுயராஜ்யம் இல்லாதிருப்பதேயாகும். ஆகையால்,   ஒத்துழையாமைப்
போராட்டம் அந்த அநீதியை எதிர்த்து     நடத்துவதாகவே இருக்க