பக்கம் எண் :

அதன் அலை எழுச்சி 599

Untitled Document
வேண்டும்” என்று அவர் விவாதித்தார்.   தீர்மானத்தில் சுயராஜ்யக்
கோரிக்கையையும்         சேர்த்துவிட வேண்டும் என்று பண்டித
மாளவியாஜியும்    விரும்பினார். அதற்கு நான் உடனே சம்மதித்து,
சுயராஜ்யக் கோரிக்கையையும் தீர்மானத்தில் சேர்ந்தேன். தீர்மானம்,
நீண்ட, விரிவான, ஓரளவுக்குக்   கடுமையான விவாதத்திற்குப் பிறகு
நிறைவேறியது.

     இந்த இயக்கத்தில் முதலில்         சேர்ந்தவர் மோதிலால்ஜி.
தீர்மானத்தின் பேரில்      அவருடன் நான் நடத்திய இனிமையான
விவாதம் இன்னும் எனக்கு  நினைவிருக்கிறது. சொல்லமைப்பில் சில
மாற்றங்களை அதில் செய்யவேண்டும் என்று      அவர் யோசனை
கூறினார். அவ்வாறே நான் செய்தேன்.     தேச பந்துவையும் இந்த
இயக்கத்தில் தாம் சேர்த்துவிடுவதாகச் சொன்னார்.    தேசபந்துவின்
உள்ளம் தீர்மானத்திற்கு ஆதரவாகவே இருந்தது. ஆனால், வேலைத்
திட்டத்தை நிறைவேற்றி       வைக்கும் ஆற்றல் பொதுமக்களுக்கு
இருக்குமா என்பதில் அவருக்குச்       சந்தேகம் இருந்தது. நாகபுரி
காங்கிரஸில்தான் அவரும் லாலாஜியும் அதை      முழு மனத்துடன்
ஏற்றுக்கொண்டார்கள்.

     லோகமான்யர் இல்லாத தன்  நஷ்டத்தைக் குறித்து   விசேஷ
மகாநாட்டில் நான் மிகுந்த       மன வருத்தத்துடன் உணர்ந்தேன்.
லோகமான்யர் அன்று உயிரோடிருந்திருப்பாராயின், அச்சமயம் அவர்
நிச்சயம் எனக்கு ஆசி கூறியிருப்பார் என்ற    திடமான நம்பிக்கை
எனக்கு இன்றும் இருக்கிறது.         அது வேறு விதமாக இருந்து,
ஒத்துழையாமை இயக்கத்தை அவர் எதிர்த்திருந்தாலும், அவருடைய
எதிர்ப்பை எனக்கு ஒரு பாக்கியமாகவும்,  போதனையாகவுமே நான்
மதித்திருப்பேன்.  எங்களிடையே எப்பொழுதும் அபிப்பிராய பேதம்
இருந்திருக்கிறது. ஆனால், அது     மனக்கசப்பை உண்டாக்கியதே
இல்லை. எங்களுக்குள்      இருந்த பந்தம் மிகவும் நெருக்கமானது
என்று நம்பிக் கொள்ளுவதற்கு அவர்      எப்பொழுதும் என்னை
அனுமதித்து வந்தார். இதை       நான் எழுதும்போது கூட, அவர்
மரணத்தைப் பற்றிய        சந்தர்ப்பங்கள் என் கண் முன்பு மிகத்
தெளிவாக நிற்கின்றன. அப்பொழுது     நடுநிசி நேரம். என்னுடன்
அப்பொழுது          வேலை செய்து வந்த பட்டவர்த்தன், அவர்
மரணமடைந்தார் என்ற     செய்தியை டெலிபோன் மூலம் எனக்கு
அறிவித்தார். அச்சமயம் என்னுடைய சகாக்கள்  என்னைச் சூழ்ந்து
இருந்தனர். அச்செய்தியைக் கேட்ட  மாத்திரத்திலேயே, “என் மிகப்
பெரிய துணைவர் போய் விட்டார்” என்பதை என் உதடுகள் தாமே
ஒலித்தன. அப்பொழுது           ஒத்துழையாமை இயக்கம் முழு
வேகத்துடன் நடந்து கொண்டிருந்தது. அவரிடமிருந்த ஆதரவையும்
உற்சாகமூட்டும் சொல்லையும்      நான் ஆவலுடன் எதிர்பார்த்துக்
கொண்டு இருந்தேன். ஒத்துழையாமையின் முடிவான    கட்டத்தைக்