பக்கம் எண் :

மாறுதல்கள்63

Untitled Document
செலவு செய்த   ஒவ்வொரு     பார்த்திங்(காலணா)குக்கும்  கணக்கு
வைத்திருந்தேன்.  செலவு செய்வதைத்       தீர யோசித்தே செய்து
வந்தேன்.  வண்டிச் சத்தம்,   தபால் செலவு,   பத்திரிக்கை வாங்கச்
செலவிட்ட சில காசுகள் போன்ற     சிறு செலவினங்களையும் கூடக்
கணக்கில் எழுதுவேன். தினந்தோறும் படுக்கப் போவதற்கு முன்னால்
கணக்கை கூட்டி      இருப்புக் கட்டுவேன்.   அப்பொழுதிலிருந்தே
இப்பழக்கம் என்னிடம் நிலைத்து விட்டது.   இதன் பலனாக, பொதுப்
பணத்தை     லட்சக்கணக்கில் நான் கையாள நேர்ந்தபோது அதைச்
செலவிடுவதில் கண்டிப்பான      சிக்கனத்தை அனுசரிக்க என்னால்
முடிந்ததோடு, நான் நடத்திய எல்லா    இயக்கங்கள் சம்பந்தமாகவும்,
வெளிக்கடன் எதுவும் இல்லாமல் எப்பொழுதுமே     கையில் மிச்சத்
தொகையே     இருந்திருக்கிறது   என்பதை     அறிவேன்.   என்
வாழ்க்கையின் இந்த அனுபவத்தை ஒவ்வோர் இளைஞரும் பாடமாகக்
கொண்டு,    தம்மிடம் வரும் தொகை     ஒவ்வொன்றுக்கும்,  தாம்
செலவிடுவதற்கும் கணக்கு வைக்க  வேண்டியதை ஒரு கடமையாகக்
கொள்ளட்டும்.    அப்படிச் செய்தால்     என்னைப்போல் முடிவில்
நன்மையையே அடைவார்கள்.

     என்    வாழ்வு  முறையை நானே  கண்டிப்பாகக்   கவனித்து
வந்ததால், செலவில் சிக்கனம் செய்ய வேண்டியதன்    அவசியத்தை
நான் அறிய முடிந்தது.    ஆகையால், எனக்கு   ஆகும் செலவைப்
பாதியாகக்   குறைத்துவிடுவது    என்று          தீர்மானித்தேன்.
போக்குவரத்துக்கு     வண்டிச் சத்தம்   கொடுப்பதிலேயே அதிகத்
தொகை செலவாகிறது என்பது கணக்கிலிருந்து தெரிந்தது.  அதோடு,
ஒரு குடும்பத்தில் நான் வசித்து வந்ததால் வாரந்தோறும்   தவறாமல்
குறிப்பிட்ட தொகை     அவர்களுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது.
அத்துடன், அக் குடும்பத்தினரை மரியாதைக்காக     ஹோட்டலுக்கு
அழைத்துச் செல்வது,     அவர்களுடன் விருந்துகளுக்குப் போவது
போன்ற வகையிலும்   செலவாகி வந்தது. முக்கியமாகக் கூட வரும்
நண்பர்கள்,  பெண்மணியாக இருந்தால்,   எல்லாச்  செலவுகளையும்
ஆணே செய்ய   வேண்டும் என்பது          அவர்கள் வழக்கம்.
இதனாலெல்லாம் போக்குவரத்துச் செலவு மிக   அதிகமாக இருந்தது.
வெளியில் சாப்பிடுவதனால் - வீட்டில் சாப்பிடாமல்   இருந்ததற்காக
வாராந்திரக் கணக்கில்       எதுவும் குறைத்துக்        கொடுக்க
முடியாதாகையால், அதிகப்படி செலவாயிற்று. கௌவரம்      என்ற
தவறான எண்ணம்     காரணமாக என் பணம் செலவாகி விடுவதை
நிறுத்துவதைப்  போன்றே இந்தச் செலவுகளையும் குறைத்துவிடலாம்
என்று எனக்குத் தோன்றிற்று.

     ஆகவே, இனி ஒரு குடும்பத்துடன்   வசிப்பதற்குப் பதிலாகத்
தனியாக அறைகளை வாடகைக்கு   அமர்த்திக்கொள்ளுவது என்று
முடிவு செய்தேன். எனக்கு இருக்கும் வேலையை அனுசரித்து, என்