பக்கம் எண் :

64சத்திய சோதனை

Untitled Document
குடியிருப்பையும் ஓர் இடத்திலிருந்து           மற்றோர் இடத்திற்கு
மாற்றிக்கொள்ளவும்,   அதே சமயத்தில் அதனால் அனுபவம் பெறவும்
தீர்மானித்தேன். எனக்கு வேலையிருக்கும் இடத்திற்கு     அரைமணி
நேரத்தில் நடந்து     போய்விடக் கூடியதாகவும்,  அதனாலும் செலவு
குறைவதாகவும் இருக்கும் வகையிலும்,  அறைகளைத்   தேர்ந்தெடுக்க
வேண்டும்.    இதற்கு முன்னால் நான்         எங்காவது வெளியில்
போவதாயிருந்தால் ஏதாவது        ஒரு வண்டியை      அமர்த்திக்
கொள்ளுவேன். இனி நடந்தே போவதென்றால், நடப்பதற்கு வேண்டிய
அவகாசத்தையும்     தேடிக்கொள்ள வேண்டும்.   புதிய ஏற்பாட்டில்
நடையும் சிக்கனமும்     சேர்ந்திருந்தன. அதன்படி வண்டி வாடகை
கொடுத்து மிச்சமானதோடு தினம்        எட்டு அல்லது பத்து மைல்
நடையும் எனக்குக் கிடைத்தது.     முக்கியமாக நீண்ட தூரம் நடந்த
இந்தப் பழக்கத்தினாலும்,   இங்கிலாந்தில் இருந்த    வரையில் நான்
நோயே இல்லாமல் இருந்தேன் ;   என் உடலும்      உரம் பெற்றது.

     இவ்வாறு நான்     இரண்டு அறைகளுள்ள     ஓர் இடத்தை
வாடகைக்கு அமர்த்திக்கொண்டேன்.   அதிர் ஓர் அறை, உட்கார்ந்து
வேலை செய்வதற்கு; மற்றொன்று     படுக்கையறை. எனது லண்டன்
வாழ்க்கையில் இது       இரண்டாவது கட்டம்.  மூன்றாவது கட்டம்
இனிமேல்தான் வரவேண்டும்.

     இந்த மாறுதல்களினால் என் செலவுகள் பாதியாகக் குறைந்தன.
ஆனால்,        எனக்கிருந்த அவகாசத்தை எப்படிப் பயன்படுத்திக்
கொள்ளுவது? பாரிஸ்டர்          பரீட்சைக்கு அதிகமாகப் படிக்க
வேண்டியதில்லை         என்பது எனக்குத் தெரியும்.  ஆகையால்
நேரத்திற்குப் பஞ்சம்      இருப்பதாகத் தோன்றவில்லை.  ஆங்கில
மொழியில் எனக்குத் திறன் போதாமல் இருந்ததே   எனக்குத் தீராக்
கவலையாக இருந்து வந்தது.   முதலில் பி. ஏ. பட்டம் பெற்று, பிறகு
என்னிடம் வா     என்று ஸ்ரீ லேலி   (பிற்காலத்தில் ஸர் பிரடரிக்)
சொன்ன சொற்கள் இன்னும் என் செவிகளில்   ஒலித்துக்கொண்டே
இருந்தன.   பாரிஸ்டர்     பரீட்சையில் தேறுவதோடு மாத்திரமின்றி
இலக்கியக் கல்வியிலும்        நான் ஏதாவது    ஒரு பட்டத்தைப்
பெறவேண்டும் என்று எண்ணினேன்.   ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ்
சர்வகலா சாலைகளின்    படிப்பு முறைகளைப் பற்றி விசாரித்தேன்.
சில நண்பர்களையும்          கலந்து ஆலோசித்தேன். இந்த இரு
சர்வகலாசாலைகளில்        ஒன்றில் சேருவது என்று நான் முடிவு
செய்தால்,        அதனால் செலவு அதிகமாவதோடு, இங்கிலாந்தில்
தங்குவதற்கு நான் தயாராயிருக்கும் காலத்தைவிட     அதிக காலம்
தங்கவும் நேரும் என்று கண்டேன்.   கஷ்டமானதொரு பரீட்சையில்
தேறிவிட்டேன் என்று    திருப்திப்பட நான் விரும்பினால், லண்டன்
மெட்ரிகுலேஷன்      பரீட்சையில் நான் தேறிவிடலாம் என்று ஒரு
நண்பர் யோசனை கூறினார். அப்படியானால், அதிகக் கஷ்டப்பட்டு