பக்கம் எண் :

மாறுதல்கள்65

Untitled Document
உழைக்க வேண்டியிருக்கும்; பொது அறிவும் விருத்தியாகும். இதற்குச்
செலவு அதிகப்படியாக ஒன்றும் ஆகிவிடாது     என்பது தெரிந்தது.
இந்த யோசனை              எனக்குப் பிடித்திருந்தது.  ஆனால்,
அப்பரீட்சைக்குப் படிக்க    வேண்டியிருந்த பாடங்களோ என்னைப்
பயமுறுத்தி விட்டன.      லத்தீனையும்,  தற்கால ஐரோப்பிய மொழி
ஒன்றையும் கட்டாயமாகப் படித்தாக வேண்டும்!  லத்தீனைப் படிப்பது
எப்படி?      ஆனால் அந்த நண்பரோ,  அம்மொழியைப் படித்தாக
வேண்டும் என்று பரிந்து பேசினார். வக்கீல்களுக்கு  லத்தீன் மிகவும்
பயனுள்ள மொழி.    சட்டப் புத்தகங்களைப் புரிந்துகொள்ள லத்தீன்
தெரிந்திருப்பது உபயோகமாக இருக்கும். ரோமன் சட்டம் பற்றிய ஒரு
பரீட்சை முழுவதையும்        லத்தீன்      மொழியில்தான் எழுத
வேண்டியிருக்கும்.    லத்தீன் படித்துவிட்டால் ஆங்கில மொழியிலும்
நல்ல   ஆற்றல் இருக்கும் என்றார். நண்பர் கூறியது நல்லது என்றே
தோன்றியது. என்னதான் கஷ்டமாக இருந்தாலும் சரி, லத்தீன் படித்து
விடுவது என்று   தீர்மானித்தேன்.  இதற்கு முன்னாலேயே  பிரெஞ்சு
மொழி படிக்க ஆரம்பித்து     விட்டேன்.  ஆகவே, நான் படித்தாக
வேண்டிய     இக்கால மொழியாக அதையே வைத்துக் கொள்ளலாம்
என்று நினைத்தேன். மெட்ரிகுலேஷனுக்குத் தயார்   செய்வதற்கென்று
தனிப்பட்டவர் வைத்திருந்த வகுப்பில் சேர்ந்தேன். பரீட்சைகள் ஆறு
மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும். அடுத்த பரீட்சைக்குப் போவதற்கு
எனக்கு ஐந்து மாதங்களே இருந்தன.    இது அசாத்தியமான வேலை
என்று      எனக்குத் தோன்றிற்று.   ஆங்கிலக் கனவானைப் போல்
ஆகிவிட   வேண்டும் என்று   ஆசைப்பட்டுக் கொண்டிருந்த நான்,
இப்பொழுது கருத்துள்ள    மாணாக்கனாக என்னை மாற்றிக்கொண்டு
விட்டேன்.   என் கால அட்டவணையை நிமிஷக் கணக்கு வரையில்
துல்லியமாக வகுத்துக்கொண்டேன். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள்
மற்றப் பாடங்களுடன்    லத்தீனையும், பிரெஞ்சு  மொழியையும் நான்
படித்துவிட முடியும் என்பதற்கு என் அறிவோ,    திறமையோ துணை
செய்வதாயில்லை. இதன் பலனாக லத்தீன் பரீட்சையில் தவறிவிட்டேன்.
இதற்காக   வருத்தப்பட்டேனாயினும்    மனம் தளர்ந்து விடவில்லை.
இதற்குள் லத்தீன் மொழியில் இன்னும்   ஒரு பரீட்சைக்குப் போனால்
நன்றாயிருக்கும் என்று எண்ணினேன். விஞ்ஞானப்  பகுதியில் மட்டும்
ஒரு புது விஷயத்தை     எடுத்துக் கொண்டு படிப்பது என்று முடிவு
செய்தேன். விஞ்ஞானத்தில் நான்      படித்தது ரசாயனம். மிக மிகக்
கவர்ச்சிகரமான படிப்பாக   இருந்திருக்க வேண்டிய அது,   எனக்கு
ருசிக்காமல்   போனதற்குக் காரணம்,    சோதனைகள் நடத்துவதற்கு
இடமில்லாது போனதே.     இந்தியாவில் அது கட்டாயப் பாடங்களில்
ஒன்றாக இருந்தது. ஆகவே,  லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்கு
அதைப் பாடமாக      எடுத்துக்கொண்டேன். என்றாலும், இத்தடவை