பக்கம் எண் :

68சத்திய சோதனை

Untitled Document
வைத்திய  சாத்திரத்தின்படி மசாலைகள்,  ஊறுகாய்களை விலக்கிவிட
வேண்டும்  என்றும் யோசனை கூறினர்.   அனுபவ,   பொருளாதார
விவாதத்தின்  பிரகாரம் சைவ உணவு       சாப்பிடுவதால் ஏற்படும்
செலவே மிகக்  குறைவு என்பதையும்   அவர்கள் நிரூபித்திருந்தனர்.
இந்தக்        காரணங்களையெல்லாம் என்    மனத்தில் மாறுதலை
உண்டாக்கின. இத்தகைய பலவகைப்பட்ட சைவ உணவுவாதிகளையும்
சைவ உணவு      விடுதிகளில் சந்தித்தேன்.   இங்கிலாந்தில் சைவ
உணவினர் சங்கமும் ஒன்று இருந்தது.    அவர்கள் சொந்தமாக ஒரு
வாரப் பத்திரிக்கையையும் நடத்தினார்கள்.  அப்பத்திரிக்கைக்கு நான்
சந்தாதாரனானேன். அச்சங்கத்திலும் சேர்ந்து வெகு  சீக்கிரத்திலேயே
அதன் நிர்வாகக்     குழுவிலும் உறுப்பினரானேன்.  சைவ உணவுப்
பிரசார     இயக்கத்தின்       தூண்கள்  என்று     கருதப்பட்ட
முக்கியஸ்தர்களுடன்   இச்சங்கத்தில் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது.
உணவில் என் சொந்தச்    சோதனைகளையும் செய்ய முற்பட்டேன்.

     வீட்டிலிருந்து  தருவித்திருந்த            மிட்டாய்களையும்,
ஊறுகாய்களையும்    சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.  மனம் வேறு
வழியில்        திரும்பி விட்டதால், மசாலை     மீதிருந்த மோகம்
போய்விட்டது.       மசாலையின்றிச் சமைத்த கீரை,  அப்பொழுது
ரிச்மண்டு ஹோட்டலில் சப்பென்று ருசியற்றிருந்தது.  இப்பொழுதோ,
சும்மா       வேக வைத்த கீரையே    எனக்கு ருசியாக இருந்தது.
ருசியெல்லாம் எண்ணத்தில் தான் இருக்கிறதேயன்றி நாவில் இல்லை
என்பதை இதுபோன்ற      பல பரீட்சைகள் எனக்குப் போதித்தன.

     சிக்கனத்தைக் கவனிக்க வேண்டும் என்பதும்  எப்பொழுதும்
என் நினைவில்   இருந்து வந்தது.    தேயிலை,   காப்பி போன்ற
பானங்கள் தீமை விளைவிப்பவை    என்றும், கோக்கோ குடிப்பது
நல்லதென்றும் கருதியவர்கள்      அக்காலத்தில் அநேகர் உண்டு.
உடலுக்கு       நன்மையானவைகளை        மாத்திரமே ஒருவர்
சாப்பிடவேண்டும் என்று  திடமாக நான் நம்பியிருந்ததால் தேயிலை,
காப்பி போன்ற     பானங்களைச்      சாப்பிடுவதை விட்டுவிட்டு,
அவற்றிற்குப் பதிலாகக் கோக்கோ சாப்பிடலானேன்.

     நான் சாப்பிடப்போன உணவு விடுதிகளில் இரண்டு பிரிவுகள்
உண்டு.       அவற்றில்  ஒரு பிரிவில் பல வகையான உணவுகள்
பரிமாறப்படும். ஒருவர், அவற்றில் தாம் விரும்புவதைச்   சாப்பிட்டு
விட்டு   அதற்குரிய பணத்தைக் கொடுக்க வேண்டும்.  இத்தகைய
இரவு சாப்பாட்டுக்கு       ஒன்றிலிருந்து இரண்டு ஷில்லிங் வரை
செலவாகும்.   சுமாராகப் பணக்காரராக இருப்போர்  இப்பிரிவுக்கே
போவார்கள்.   மற்றொரு பிரிவிலோ, ஆறு பென்ஸு க்குச் சாப்பாடு
கொடுப்பார்கள்.   அதில் ஒரு ரொட்டித் துண்டுடன் மூன்றுவகைப்