பக்கம் எண் :

உணவில் பரிசோதனைகள்71

Untitled Document
சாத்தியமாகும்போது,          பலவீனராயிருக்கும் கட்சியினர் கூறும்
வியாக்கியானத்தை   ஏற்றுக்கொள்ளுவது மற்றோர் சிறந்த வழி. இந்த
இரண்டு விதிகளையும்       நிராகரித்து விடும்போது, அசத்தியத்தின்
பலனாக சச்சரவுகளும் துன்பங்களும் எழுகின்றன. எவன் சத்தியத்தை
நாடுகிறானோ அவன் ஒருவனே சரியான விதியைப்   பின்பற்றுகிறான்.
வியாக்கியானத்திற்காக,     அவன் படித்தவர்களின் ஆலோசனையை
நாட     வேண்டியதில்லை.  மாமிசம் எது என்பதற்கு என் அன்னை
கொண்ட   வியாக்கியானமே சரியான வழியின்பபடி எனக்கு உண்மை
வியாக்கியானம். இதுவன்றி, என்னுடைய அனுபவ முதிர்ச்சியோ, நான்
அதிக அறிவு படைத்து விட்டேன் என்ற   அகம்பாவமோ, எனக்குப்
போதித்திருக்கக் கூடிய வியாக்கியானம் உண்மையாகாது.

     இங்கிலாந்தில் நான் செய்த     உணவுச் சோதனைகளெல்லாம்,
சிக்கனத்தையும்,  தேகாரோக்கியத்தையுமே குறிக்கோளாகக் கொண்டு
செய்யப்பட்டவை.      உணவுப் பிரச்சனைக்கும் மதத்துக்கும் உள்ள
சம்பந்தத்தைப்பற்றி நான் தென்னாப்பிரிக்காவுக்குப் போகும் வரையில்
சிந்திக்கவே இல்லை. அங்கேதான் நான் கடுமையான சோதனைகளை
மேற்கொண்டேன்.    அவற்றைக் குறித்துப்    பின்னால் கூறுகிறேன்.
என்றாலும்,    இவைகளுக்கெல்லாம்   இங்கிலாந்திலேயே    விதை
விதைக்கப்பட்டுவிட்டது.

     ஒரு மதத்தில் பிறந்தவர்களைவிட    அம்மதத்திற்குப் புதிதாக
மாறியவர்களுக்கு, அம்மதத்தினிடம் அதிக அன்பு இருப்பது இயல்பு.
சைவ உணவு என்பது அப்பொழுது     இங்கிலாந்துக்கு ஒரு புதிய
தருமம்.    எனக்கும்   அப்படியே.   ஏனெனில்,  மாமிசம் சாப்பிட
வேண்டியது அவசியம் என்பதில் திட நம்பிக்கையுள்ளவனாக  நான்
அங்கே சென்றேன்.    ஆனால்,  அறிவாராய்ச்சியின் மூலம் சைவ
உணவே   சிறந்தது என்ற   கொள்கைக்குப் பிறகு மாறி விட்டேன்
என்பதை முன்னால் கவனித்தோம். சைவ உணவு    சம்பந்தமாகப்
புதிதாக மதம்        மாறியவனுக்கு இருக்கும் உற்சாகம் எனக்கும்
இருந்ததால்,    நான் வசித்துவந்த பகுதியான பேஸ் வாட்டரில் ஒரு
சைவ      உணவுச் சங்கத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்தேன்.  ஸர்
எட்வின் அர்னால்டு        அங்கேதான் வசித்தார்.   சங்கத்திற்கு
உபதலைவராக      இருக்குமாறு அவரைக்  கேட்டுக்கொண்டேன்.
‘வெஜிடேரியன்’   என்ற   சைவ        உணவுப் பத்திரிக்கைக்கு
ஆசிரியரான      டாக்டர் ஓல்டுபீல்டு சங்கத் தலைவரானார். நான்
அதற்குச் செயலாளனானேன். கொஞ்ச காலம் சங்கம் சரிவர நடந்து
வந்தது.     ஆனால்,    சில மாதங்களில்     எல்லாம் கலைந்து
போய்விட்டது. அடிக்கடி ஓர் இடத்திலிருந்து வேறு ஓர்  இடத்திற்கு
மாறிவிடும் என் பழக்கப்படி        அப்பகுதியிலிருந்து  நான் குடி
பெயர்துவிட்டதே     சங்கம் கலைந்து     விட்டதற்குக்  காரணம்.
என்றாலும் இந்தக்