பக்கம் எண் :

70சத்திய சோதனை

Untitled Document
மீனும் தின்னலாம். ஆனால்,   என் அன்னையாரின்  வியாக்கியானம்
ஒன்றே என்னைக் கட்டுப்படுத்தும்  வியாக்கியானம்  என்பதில் நான்
நிச்சயமாயிருந்தேன். ஆகையால், நான் மேற்கொண்ட  விரதத்தின்படி
நான் முட்டைகள் தின்னலாகாது ;  அப்படியே செய்தேன்.  இதனால்
ஒரு கஷ்டம் உண்டாயிற்று.    சைவ உணவு விடுதிகளில் கூடப் பல
உணவு வகைகளிலும் முட்டை சேர்க்கிறார்கள் என்பது, விசாரித்ததில்
தெரிய வந்ததுதான்  அக்கஷ்டம். பலவகையான களிகள்,  கேக்குகள்
ஆகியவைகளில்      முட்டைக் கலப்பு உண்டு.  எனவே இன்னதில்
இன்னது இருக்கிறது     என்பது முன்னதாகவே தெரிந்திருந்தாலன்றி,
ஒரு குறிப்பிட்ட உணவில்      முட்டை கலந்திருக்கிறதா, இல்லையா
என்பதைக்      கேட்டுத் தெரிந்துகொள்ள   வேண்டிய சங்கடமான
முறையையும் நான் அனுசரிக்க வேண்டியதாயிற்று.   என் கடமையை
உணர்ந்ததன் காரணமாக எனக்கு இந்தச் சங்கடம் ஏற்பட்டதெனினும்,
இது என் உணவை        இன்னும் எளிதாக்கி விட்டது.  இவ்விதம்
எளிதானது எனக்கு இன்னுமொரு   தொல்லையையும் உண்டாக்கியது.
நான் ருசித்துச் சாப்பிடத் தொடங்கிய     பல உணவு வகைகளையும்
கைவிட நேர்ந்ததே     அத்தொல்லை.   இந்தச் சங்கடங்களெல்லாம்
சீக்கிரத்தில் மறைந்து விட்டன. ஏனெனில்,   விரதத்தைக் கண்டிப்பாக
அனுசரித்து வருகிறோம்    என்பது   எனக்கு உள்ளூற ஒரு ருசியை
உண்டாக்கியது. நாவின்   ருசியைவிட     உள்ளத்தின்   இந்த ருசி,
தெளிவாக அதிக    இன்பத்தையும்      சுகத்தையும்    தந்ததோடு
நிரந்தரமானதாகவும் இருந்தது.

     என்றாலும்,       உண்மையான அவதி இனிமேல்தான் ஏற்பட
இருந்தது.     மற்றொரு விரதத்தைப்     பற்றியதே அது. கடவுளின்
அருளைப் பெற்றோருக்கு யார்தான் தீங்கு    இழைத்துவிட முடியும்?

     விரதங்கள் அல்லது    பிரதிக்ஞைகளைக் குறித்து இங்கே சில
விஷயங்களைக் கூறுவது    பொருத்தமற்றதாகாது. பிரதிக்ஞைகளுக்கு
வியாக்கியானம்     கூறுவதிலேயே     உலகமெங்கும்   சச்சரவுகள்
உண்டாகின்றன. பிரதிக்ஞை என்னதான்   தெளிவானதாக இருந்தாலும்
சரி, தங்களுடைய     காரியத்திற்கு ஏற்றவகையில் அதைப்  புரட்டித்
திரித்துக்       கூறிவிடுகிறார்கள்.    அப்படிச்   செய்கிறவர்களைப்
பணக்காரர்களிலிருந்து ஏழைகள் வரையில், அரசர்களிலிருந்து உழவர்
வரையில், சமூகத்தின்       எல்லா வகுப்பினரிடையேயும் காணலாம்.
சுயநலம் அவர்களைக் குருடர்கள் ஆக்கிவிடுகிறது.  தெளிவற்ற  ஒரு
மனோ பாவத்தினால்      அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்
கொள்ளுவதுடன்    உலகத்தையும்,    கடவுளையும் கூட  ஏமாற்றப்
பார்க்கிறார்கள்.    ஒரு பிரதிக்ஞையை      யோக்கியமாகக் கூறும்
வியாக்கியானத்தை       ஒப்புக்கொண்டு விடுவதுதான் இதில் சிறந்த
வழியாகும். இரண்டு வகையான வியாக்கியானங்கள்