பக்கம் எண் :

94சத்திய சோதனை

Untitled Document
வேண்டி இருந்தது, எப்பீல் கோபுரம்.   அது     முழுக்க  முழுக்க
இரும்பினால் கட்டப்பட்டது. சுமார் ஆயிரம் அடி உயரம்  இருக்கும்.
கவர்ச்சியான மற்றும் பல பொருள்களும்       காட்சியில் இருந்தன.
ஆனால், எல்லாவற்றிலும்    மிக முக்கியமானதாக இருந்தது அந்தக்
கோபுரமே. ஏனெனில், அவ்வளவு உயரமான    ஒரு கட்டுக்கோப்பு,
விழுந்து விடாமல் எப்போதும் நிற்க முடியாது என்று  அதுவரையில்
கருதப்பட்டு வந்தது.

     பாரிஸில் சைவ உணவு விடுதி ஒன்று உண்டு என்று கேள்விப்
பட்டிருந்தேன். அங்கே ஓர் அறையை அமர்த்திக் கொண்டு,   ஏழு
நாட்கள் தங்கினேன். பாரிஸூக்குப் பிரயாணம் செய்ததிலும், அதைச்
சுற்றிப் பார்த்ததிலும் மிகச் சிக்கனமாகவே செலவழித்துச் சமாளித்துக்
கொண்டேன். பாரிஸின் அமைப்புப் படத்தையும்,     கண்காட்சியின்
விவரங்களும் படமும் அடங்கிய புத்தகத்தையும் வைத்துக் கொண்டு,
அவற்றின்       உதவியால்    பெரும்பாலும்    நடந்தே சென்று,
எல்லாவற்றையும்        பார்த்தேன். முக்கியமான தெருக்களுக்கும்,
பார்க்கவேண்டிய        இடங்களுக்கும் வழி தெரிய,  அவைகளே
போதுமானவை.

     கண்காட்சி    மிகப் பெரியது.    பலவகையான  பொருட்கள்
வைக்கப்பட்டிருந்தன.      என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு
இப்பொழுது நினைவு இல்லை. எப்பீல்  கோபுரத்தில் இரண்டு, மூன்று
தடவை        நான் ஏறியதால்   அதுமாத்திரம்   எனக்கு நன்றாக
நினைவிருக்கிறது. அதன் முதல் அடுக்கில்    ஒரு சாப்பாட்டு விடுதி
இருந்தது.    வெகு உயரத்தில் நான் மத்தியானச் சாப்பாடு உண்டேன்
என்று    சொல்லிக் கொள்ளுவது     சாத்தியமாக வேண்டும் என்ற
திருப்திக்காக மாத்திரம் ஏழு ஷில்லிங்கை    அங்கே தொலைத்தேன்.

     பாரிஸிலுள்ள புராதனமான கிறிஸ்தவாலயங்கள்   இன்னும் என்
நினைவில்     இருக்கின்றன.   அவற்றின்   கம்பீரமான தோற்றமும்
அங்கிருந்த அமைதியும் என்றும்   மறக்க முடியாதவை.  நோத்ரதாம்
கோயிலின் அற்புதமான அமைப்பும்,    உள்ளே செய்யப்பட்டிருக்கும்
விமரிசையான சித்திர வேலைகளும்   அழகான சிலைகளும் என்றும்
மறக்க முடியாதவை.     இத்தகைய   தெய்வீகமான கோயில்களைக்
கோடிக்கணக்கில் செலவிட்டுக்      கட்டியவர்களின் உள்ளங்களில்
நிச்சயமாகக் கடவுள் பக்தி       இருந்திருக்கவே வேண்டும் என்று
எண்ணினேன்.

     பாரிஸ் நகரின்            நாகரிக வாழ்க்கையைக் குறித்தும்,
களியாட்டங்களைப்பற்றியும்         நான் நிரம்பப் படித்திருந்தேன்.
அவற்றிற்கான அறிகுறிகள் ஒவ்வொரு     தெருவிலும் தென்பட்டன.
ஆனால்,     இக் காட்சிகளுக்கெல்லாம்     புறம்பானவைகளாகவே
கிறிஸ்தவாலயங்கள் இருந்தன. இக்கோயில்கள் ஒன்றினுள்