இருந்தது. கோப்பெருஞ்சிங்கன் சிதம்பரம் கோவிலின்
தெற்குக் கோபுரத்தைக் கட்டினான். இங்கிருந்த கோட்டையின்
சில எஞ்சிய பகுதிகள், அகழிகள் ஆகியவற்றை இன்றும்
காணலாம். இங்குக் கைலாசநாதர் கோவிலும், இளமீஸ்வரர்
கோவிலும் உள்ளன. இவை சிற்பக்கலைச் சிறப்புமிக்கவை.
கடலூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் நெல்லிக்குப்பம்
உள்ளது. இங்குள்ள சர்க்கரை ஆலை கி.பி. 1848இல்
பாரிகம்பெனியாரால் நிறுவப்பட்டது. கடலூரிலிருந்து 35 கி.மீ.
தொலைவில் நெய்வேலி உள்ளது. இங்குத் தமிழ்நாட்டின் பழுப்பு
நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. உரத்தொழிற்சாலையும், அனல்
மின் உற்பத்தி நிலையமும் இங்கு உள்ளன.
கடலூரிலிருந்து 38கி.மீ. தொலைவில்
திருவக்கரை உள்ளது.
இங்குச் சந்திர மௌலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில்
சோழ அரசி செம்பியன் மாதேவியாரால் கட்டப்பட்டதாகும்.
இக்கோவிலின் ஆயிரங்கால் மண்டபம் அம்மையப்பன்
சம்புவராயன் என்பவரால் கட்டப்பட்டதாகும். கி.பி. 1130இல்
காங்கேயன் என்பவரால் இக்கோவிலின் ஒரு மண்டபமும்,
கோபுரமும் கட்டப்பட்டன.
|