பக்கம் எண் :

100தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

என்ற இராமலிங்க அடிகள் (1823-1874) வடலூரிலிருந்து
11 கி.மீ. தொலைவிலுள்ள மருதூரில் பிறந்தார். இவர் தமது
12ஆவது வயது முதல் முறையான ஞான வாழ்க்கையைத்
தொடங்கினார். இவர் கி.பி. 1865இல் வடலூரில் சமரச வேத
சன்மார்க்க சங்கத்தைத்
தோற்றுவித்துப் புகழ் பெற்றார்.
‘திருவருட்பா’ இவர் இயற்றிய நூல் ஆகும். சத்திய
தருமச்சாலை, சத்திய ஞான சபை
ஆகியவற்றையும்
இவர் நிறுவினார். “கடவுள் ஒருவரே”, “ஜாதி, சமய
வேறுபாடுகள் கூடாது” போன்ற கருத்துகளை இவர்
கொண்டிருந்தார்,

ஸ்ரீ முஷ்ணம்

சிதம்பரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் ஸ்ரீ முஷ்ணம்
உள்ளது. இவ்வூரில் புகழ் பெற்ற வைணவ ஆலயம் உள்ளது.
தஞ்சை நாயக்க மன்னன் அச்சுதப்பர். இவ்வாலயத்தைக்
கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உடையார்பாளையம்
நிலக்கிழார் ஒருவரால் இவ்வாலயத்தின் சில கட்டடங்கள்
எழுப்பப்பட்டன (1713). இவ்வாலயத்திலுள்ள 16 தூண்
மண்டபம் சிற்பக்கலைக்கு உறைவிடமாக உள்ளது.

திருவதிகை

கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 22 கி.மீ.
தொலைவில் திருவதிகை உள்ளது. இங்கு வீரட்டானம்
என்னும் சிவன் கோவில் உள்ளது. இக்கோவில்
திலகவதியாரும் திருநாவுக்கரசரும் திருத்தொண்டு புரிந்த தலம்
ஆகும். அப்பர் வாழ்ந்த கி.பி. 7ஆம் நூற்றாண்டிலேயே
சிறப்புப் பெற்றிருந்தது. பல்லவ மன்னன் பரமேஸ்வரன்
காலத்தில் கட்டப்பட்டது. நிருபதுங்கவர்மன் காலத்தில்
புதுப்பிக்கப்பட்டது. பாண்டிய மன்னரின் திருப்பணியும்
இங்கு உள்ளது.

திருவதிகை பண்டைக் காலத்தில் ஒரு சமண மையமாக
விளங்கியது.

பண்ருட்டியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் சேந்தமங்கலம்
உள்ளது. இவ்விடம் பல்லவர் வழிவந்த காடவராயர் தலைவன்
கோப்பெருஞ்சிங்கனின் (கி.பி. 13ஆம் நூற்றாண்டு)
தலைநகராக