பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்99

புதுச்சேரிக்கு அருகில் (3 கி.மீ. தொலைவில்) அரிக்க மேடு
என்ற இடம் உள்ளது. 1937ஆம் ஆண்டு துப்பிராய் என்பவரும்
1945இல் சர் மார்டிமர் வீலர் என்பவரும் இப்பகுதியில்
அகழ்வாராய்ச்சி நடத்தினர். இங்குப் பல தொல்பொருள்கள்
கண்டெடுக்கப்பட்டன. இவற்றிலிருந்து ரோமாபுரிக்கும் புதுச்சேரிக்கும்
சங்க காலத்தில் நெருங்கிய வாணிபத் தொடர்பு இருந்தது என்றும்,
இங்கு ஒரு உரோமானியக் குடியிருப்பு இருந்திருக்கவேண்டும்
என்றும் கருதப்படுகிறது. உரோமர்கள் வசித்த வீடுகள்,
அவர்கள் பயன்படுத்திய தங்கக் காசுகள், பானைகள் இன்னும்
பல பொருள்கள் அகழ்வாராய்ச்சியின் போது இங்குக்
கிடைத்துள்ளன. இத்தொல்பொருள்கள் கி.மு. சுமார் முதல்
நூற்றாண்டிற்கும், கி.பி. முதல் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட
காலத்தைச் சார்ந்தவையாகும் என்று கருதப்படுகிறது.

அரவிந்தர், அரவிந்தர் ஆசிரம அன்னை ஆகிய
இவர்களின் ஆன்மிகக் கோட்பாடுகளை அடிப்படையாகக்
கொண்டு ‘அரோவில்’ என்ற நகர் புதுச்சேரிக்கு அருகில்
உருவாகியுள்ளது.

விருத்தாசலம்

கடலூரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் விருத்தாசலம் நகர்
உள்ளது. இந்நகரில் புகழ்பெற்ற சிவாலயம் உள்ளது. இங்குள்ள
இறைவன் விருத்தகிரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
இங்கு பாலாம்பாளுக்கு ஒரு சந்நிதியும், விருத்தாம்பாளுக்கு
ஒரு சந்நிதியும் உள்ளன. இக்கோவிலின் சில முக்கியப் பகுதிகள்
உத்தம சோழனின்
தாயும், கந்தராதித்தனின் மனைவியுமான
செம்பியன் மாதேவியாரால்
கட்டப்பட்டதாகும்.
நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் திருப்பணிகளும்
இக்கோவிலில் உள்ளன.

தேரின் அமைப்பைக்கொண்ட இக்கோவிலிலுள்ள
மண்டபமும், இதன் தூண்களும் சிற்பக் கலைச் சிறப்புமிக்க தாகும்.

விருத்தாசலத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள
வடலூரில் இராமலிங்க சுவாமிகள் ஆலயம் உள்ளது. சமரச
சன்மார்க்கம் தழைத்த ஊர் இது. திருவருட் பிரகாச வள்ளலார்