பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்103

முதலாம் பராந்தக சோழன் : கி.பி. (907-953)
தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பொன் வேய்ந்தார். இக்கோவிலின்
நூற்றுக்கால் மண்டபம் விக்ரம சோழன் (கி.பி. 13ஆம்
நூற்றாண்டு) காலத்தில் கட்டப்பட்டது. விக்ரம் சோழனின்
மகன் இரண்டாம் குலோத்துங்கன் அவருக்குப் பின் ஆட்சிக்கு
வந்த மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் இக்கோவிலில்
பல திருப்பணிகள் புரிந்துள்ளனர். இக்கோவிலின் விக்கிரமச்
சோழன் திருமளிகையும், குவோத்துங்க சோழன் திருமளிகையும்

சோழ மன்னர்களின் திருப்பணிகளாகும்.

பிற்காலப் பாண்டியரில் புகழ்பெற்ற சடையவர்மன் சுந்தர
பாண்டியன்
(1251-1271) தனது வெற்றிகளின் நினைவாகத்தில்லைப்
பெருமானை வணங்கித் துலாபாரத் தானம் வழங்கினார்.
இக்கோவிலுக்குப் பொன் வேய்ந்தார். இக்கோவிலின்
மேற்கு இராஜகோபுரத்தையும் இவர் அமைத்தார்.

சேந்தமங்கலத்தைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த
பல்லவர் வழிவந்த காடவராயர் தலைவன்
கோப்பெருஞ்சிங்கன்
(1229-1278) இக்கோவிலின் தெற்குக்
கோபுரத்தைக் கட்டினார்.

கி.பி. 1310ஆம் ஆண்டு அலாவுதீன் கில்ஜியின்
படைத்தளபதி மாலிக்காபூரின் மதுரைப் படையெடுப்பின்பொழுது
சிதம்பரம் கோவில் இஸ்லாமியப் படைகளால் தாக்கப்பட்டது.

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் (1509-1529)
தமது ஒரிஸ்ஸா வெற்றியின் நினைவாகத்தில்லைக் கோவிலின்
வடக்கு இராஜகோபுரத்தை அமைத்தார். மதுரை நாயக்க மன்னர்
வீரப்பன் (1572-1595) இக்கோவிலின் ‘வீரப்ப நாயக்கர் மதிலை’
அமைத்தார்.

காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்ப முதலியார் (1754-1794),
அவர் தமக்கை சுப்பம்மாள் ஆகியோர் தில்லைக்கோவிலில்
பல திருப்பணிகள் புரிந்துள்ளனர். நாட்டுக்கோட்டை நகரத்தார்களின்
பல திருப்பணிகளையும் இக்கோவில் கொண்டுள்ளது.

கர்நாடகப் போரின்பொழுது பிரெஞ்சுக்காரர்கள்
சிதம்பரத்தை 1753இல் ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்றி
அதை 1760வரை