பக்கம் எண் :

114தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

மாயூரத்திற்கு அருகில் தேரழுந்தூர் உள்ளது. இவ்வூர்
கம்பர்
தோன்றிய இடம் எனப்படுகிறது. தமிழ்க் கவிதை
உலகில் தலைசிறந்த பெருமை உடையவர் கம்பர். இவர்
கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று கொள்ளப்படுகிறது.
இவர் இயற்றிய ‘கம்பராமாயணம்’ ஒர் ஒப்பற்ற நூலாகக்
கருதப்படுகிறது. கம்பரின் பெருமையை அறியவும்,
கம்பராமாயணத்தின் சிறப்பினை உணரவும், கம்பன்
கழகங்கள்
பல இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காரைக்குடி
கம்பன் கழகம் 1939இல் தோற்றுவிக்கப்பட்டது.