சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றியுள்ளது. பல
சிவாலயங்கள் தருமையாதீனத்தின் நிர்வாகத்தில்
உள்ளன.
தருமையாதீனத்தின் 26ஆவது குருமகாசன்னிதானமாக
இருப்பவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ சண்முக தேசிக ஞான சம்பந்த
பரமாச்சாரிய சுவாமிகள் ஆவார்.
திருவாவடுதுறை
மாயூரத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் திருவாவடுதுறை
உள்ளது. சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிவரும்
மடங்களுள் ஒன்றான திருவாவடுதுறை மடம் இங்கு உள்ளது.
இது கி.பி. 15ஆம் நூற்றாண்டில் நமச்சிவாய மூர்த்திகள்
என்பவரால் நிறுவப்பட்டது. திருவாவடுதுறை மடத்தைச்
சேர்ந்த
சிவஞான முனிவர் சைவ சமயத்திற்குத் தொண்டாற்றியவர்களில்
குறிப்பிடத்தக்கவர் ஆவார். மகா வித்துவான்
மீனாட்சிசுந்தரம்
பிள்ளையும் அவர் மாணவர் உ.வே. சாமிநாத ஐயரும்
இம்மடத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
திருவாவடுதுறை ஆதீனத்தாரின் நிர்வாகத்தில் பல
கோவில்கள் உள்ளன. இந்த ஆதீனத்தின் 22ஆவது குருமகா
சன்னிதானமாக இருப்பவர் அம்பலவாண தேசிக
பரமாச்சாரிய சுவாமிகள் ஆவார்.
திருவாவடுதுறையிலுள்ள
மாசிலாமணீசுவரர் கோவில் புகழ்மிக்கதாகும்.
மாயூரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில்
‘திருக்கடவூர்’
உள்ளது. இங்கு அமிர்தகடேசுவர சுவாமிக்குப் புகழ்மிக்க
கோவில் உள்ளது. இங்குள்ள அம்மன் வாலாம்பிகை
எனப்படுகிறார். இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி
(சிவபெருமான்) அருளால் மார்க்கண்டேயர் காலனைக்
கடந்ததாகப் புராணம் கூறும்.
மாயூரத்திலிருந்து 19 கி.மீ. தொலைவில்
கோனேரிராஜபுரம்
உள்ளது. இங்குச் சோழ அரசி செம்பியன் மாதேவியால்
கட்டப்பட்ட சிவாலயம் உள்ளது.
|