பக்கம் எண் :

126தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

தாகவும், பின் அவரது கணவன் அக் கனியைக் கேட்டதாகவும்,
இவ்வம்மையார் இறைவனருளால் பெற்ற கனியைத் தம்
கணவருக்குப் படைத்ததாகவும் இவரது வாழ்க்கை வரலாற்றில்
கூறுவர். ‘மாங்கனித் திருநாள்’ இங்கு நடைபெறும் முக்கிய
விழாவாகும்.

காரைக்கால் அம்மையார் இயற்றிய நூல்களுள்
குறிப்பிடத்தக்கது “அற்புதத் திருவந்தாதி” ஆகும்.
காரைக்கால் அம்மையாருக்குக் காரைக்காலில் ஒரு கோவில்
உள்ளது.

காரைக்காலிலிருந்து 5 கி.மீ. தொலைவில் திருநள்ளாறு
உள்ளது. தமிழ்நாட்டில் சனீஸ்வரனுக்கான முக்கியக் கோவில்
இங்குதான் உள்ளது. ‘சனிப்பெயர்ச்சித் திருநாள்’ இங்கு
நடைபெறும் முக்கிய விழாவாகும்.

வேதாரண்யம்

தஞ்சாவூர் மாவட்டத்தில், கிழக்குக் கடற்கரையில்
வேதாரண்யம்
உள்ளது. இவ்வூர் இந்தியச் சுதந்தரப் போராட்ட
வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

1930ஆம் வருடம் மகாத்மா காந்தியடிகள் தலைமையில்
மேற்குக் கடற்கரையில் தண்டி என்ற இடத்தில் உப்புச்
சத்தியாக்கிரகம் நடந்தது. மகாத்மா காந்தியடிகளின் உப்புச்
சத்தியாக்கிரக இயக்கத்தின் ஒரு பகுதியாகத் தமிழகத்தில்
வேதாரண்யத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு
இராஜாஜி சுமார் 100 தொண்டர்களைத் தேர்ந்தெடுத்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் திருச்சி தேசியவாதி
T.S.S. இராஜன்
இல்லத்திலிருந்து 1930, மார்ச் 13இல்
இயக்கத்தைத் தொடங்கினார். போராட்டத்திற்கு இராஜாஜி
தலைமை தாங்கினார். மார்ச் 28 (1930)இல் தொண்டர்களும்
தலைவர்களும் வேதாரண்யம் வந்தடைந்தனர். வேதாரண்யக்
கடற்கரையில் உப்புக் காய்ச்சும் ஏற்பாடுகளைச் செய்தவர்
வேதாரண்யத்தைச் சேர்ந்த சர்தார் வேதரத்தினம் ஆவார்.
சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சப்பட்டது. இதனால் தொண்டர்கள்
காவல் துறையினரால் தடியினாலும், புளியம் விளாரினாலும்