பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்125

வேளாங்கண்ணி

நாகப்பட்டினத்திற்குத் தெற்கில் 10 கி.மீ. தொலைவில்
வேளாங்கண்ணி என்ற இடம் உள்ளது. வங்காள விரிகுடாக்
கரையை ஒட்டி இவ்விடம் அமைந்துள்ளது. இங்குப் புகழ்பெற்ற
மாதாக் கோவில் உள்ளது. கத்தோலிக்கக் கிறித்தவர்களின் புனித
ஸ்தலமாக இது உள்ளது. இம்மாதாகோவில் கி.பி. 1565இல்
கட்டப்பட்டது. கிறித்தவ சமயத்தினரைத் தவிர இதர
சமயத்தினரும், வேளாங்கண்ணி மாதாவின் அருள் வேண்டி
இக்கோவிலுக்கு வருகை தருகின்றனர். மாதாவின் நினைவாக
ஆண்டுதோறும் ஆகஸ்டு 30முதல் செப்டம்பர் 8வரை பெரிய
விழா நடைபெறுகிறது. இவ்விழாவைக் காண இந்தியாவின் பல
பகுதிகளிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் கத்தோலிக்கர்கள்
பெரும் திரளாக வருகின்றனர்.

சிக்கல்

நாகப்பட்டினத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் சிக்கல்
என்ற இடம் உள்ளது. இங்கு நவநீதேச்சுரர் கோவில் உள்ளது.
இங்கு முருகன் சிங்கார வேலவராகக் காட்சி தருகிறார். தெக்கூர்
கருமுத்து அழகப்ப செட்டியாரால் இக்கோவில் புதுப்பித்துக
கட்டப்பட்டுள்ளது.

காரைக்கால்

நாகப்பட்டினத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் காரைக்கால்
உள்ளது. தஞ்சை மராத்திய மன்னரிடமிருந்து கி.பி. 1739இல்
இவ்விடத்தை பிரெஞ்சுக்காரர்கள் பெற்றனர். கி.பி. 1954 இல்
புதுச்சேரியுடன் காரைக்காலும் இந்திய அரசுடன் இணைந்தது.
தற்பொழுது இந்திய யூனியன் பிரதேசமான புதுச்சேரியின்
ஆட்சிக்குட்பட்ட பகுதியாகக் காரைக்கால் உள்ளது.

காரைக்கால் என்றவுடன் நமது நினைவிற்கு வருவது
காரைக்கால் அம்மையார்
ஆவார். காரைக்கால்
அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி ஆகும். இவர் 63
சிவனடியார்களில் ஒருவர். காரைக்காலில் தோன்றினார்.
சிவபெருமான்மீது மிக்க பற்றுக்கொண்டிருந்தார். தம்
கணவன்(பரமதத்தர்) கொடுத்த இரு மாங்கனிகளில் ஒன்றைச்
சிவனடியார் ஒருவருக்கு அளித்த