சந்நிதிகள் பல சிறிய அளவில் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்க
ஒன்று சித்தீஸ்வரர் சந்நிதி ஆகும். செங்கற்கட்டடமாக
இருந்த அசலேஸ்வரர் சந்நிதியை செம்பியன் மாதேவியார்
முற்றிலும் கல் கட்டடமாக ஆக்கினார். முதலாம்
இராஜாதிராஜன்
இக்கோவிலின் பெரிய கோபுரத்தையும், சபாபதி மண்டபத்தையும்
கட்டினார். இரண்டாம் இராஜேந்திர சோழன்,
இக்கோவிலிலுள்ள
புற்றிடங்கொண்டார் (வான்மீக நாதர்) கருவறைக்கும்,
வீதிவிடங்கர் கருவறைக்கும் பொன் வேய்ந்தார்.
தஞ்சை மராத்திய மன்னர்
சரபோஜி இக்கோவிலில்
பல திருப்பணிகள் செய்து கி.பி. 1717இல் குடமுழுக்கு விழா
நடத்தினார்.
கலைச்சிறப்பு
1. வான்மீக நாதர் சந்நிதி, தியாகராஜ சுவாமி சந்நிதி
ஆகியற்றின் கருவறைச் சுவர்களிலுள்ள திருவுருவங்கள்,
இதரச்சிற்பங்கள் ஆகியவை வேலைப்பாடுமிக்கவை.
2. இக்கோவிலில்
ஏழு கோபுரங்கள் உள்ளன. அவற்றுள்
மிகப் பெரியது கிழக்குக் கோபுரம் ஆகும். இக்கோபுரத்தின்
அடிப்பகுதியில் காணப்படும் தெய்வங்களின் திருவுருவங்கள்
அரிய கலைப்படைப்புகளாகும். கோபுரத்தின் சிகரப்
பகுதியிலுள்ள சுதைச் சிற்பங்களும் அழகுமிக்கவை.
3. இக்கோவிலிலுள்ள
மண்டபங்களில் சிறப்புமிக்கது
தேவாசிரிய மண்டபம் ஆகும். இங்குதான் கந்தரமூர்த்தி
சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடினார்
என்று
பெரிய புராணம் கூறுகிறது.
4. மனுநீதி சோழனின்
தலைநகரான திருவாரூரின்
வீதியில் அம்மன்னனின் மகன் பசுங்கன்று ஒன்றைத்
தேரில்
நசித்துக் கொன்றார் என்றும், நீதி தவறாது ஆட்சி புரிந்த
இச்சோழ மன்னன் தன் மகனை அத்தேரின் சக்கரத்தில் நசித்துக்
கொன்றார் என்றும், பின் இறைவன் அருளால் மாண்டவர்
உயிர்
பெற்றனர் என்றும் சேக்கிழாரின் பெரியபுராணம்
கூறுகிறது.
இக்கதையைக்
|