பக்கம் எண் :

330தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

அமைப்பும், யக்ஷிகளின் கரங்களில் சாமரங்களும்
அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. குணசாகரப் படாரர் என்னும்
சமணப் பெரியாரும் இன்னும் பலரும் இங்கு வாழ்ந்துள்ளனர்.
இறந்து போன சமணத் துறவிகள்(குரவர்கள்), அவர்களது சீடர்,
தந்தை, தாய், பிள்ளைகள் ஆகிய பலரின் நினைவாக இங்குச்
சிற்ப உருவங்கள் காணப்படுகின்றன.

கழுகு மலையில் காணப்படும் சமணப் புடைப்புச்சிற்பங்கள்
அழகுமிக்கவை. இவை நமது அரிய கலைச்செல்வங்களாகும்.

சங்கரநயினார் கோவில்

கழுகு மலையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் சங்கரன்
கோவில் எனப்படும் சங்கர நயினார் கோவில் உள்ளது.
இக்கோவில் கி.பி. 1022இல் உக்கிர பாண்டியனால்
கட்டப்பட்டதாகும். கி.பி. 12ஆம் நூற்றாண்டில் கோவிலின்
இராஜகோபுரம், முன்மண்டபம், ஆகியவை ஸ்ரீசீவலமாற
பாண்டியனால்
புதுப்பித்து அமைக்கப்பட்டது.

கருவறையில் சிவனும் (சங்கரர்) விஷ்ணுவும் (நாராயணன்)
ஒன்றாக இருப்பதைக் குறிக்கும் திருவுருவம் உள்ளது. இங்குள்ள
அம்மன் கோமதி அம்பிகை எனப்படுகிறார்.

இக்கோவிலின் முன்பகுதியிலுள்ள மன்மதன், ரதி,
காவற்பறையன் மணிக்கிரீவன்
ஆகிய சிற்பங்கள் நுட்பமான
வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. கோமதி அம்மன்
சந்நிதியிலுள்ள சிற்பங்கள் அழகுமிக்கவை. பூலித்தேவர்
அறையிலுள்ள மரச்சிற்பங்கள் வேலைப்பாடுமிக்கவை. 38
மீட்டர் உயரமுள்ள இராஜகோபுரம் சிற்ப, சுதை
வேலைப்பாடுமிக்கது.

ஆடித் தபசு விழா இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும்
சிறப்பாக நடைபெறுகிறது.

சங்கரன் கோவிலிலிருந்து 11 கி.மீ. தொலைவில்
நெற்கட்டுஞ் செவ்வல்
இடம் உள்ளது. கி.பி. 18ஆம்