பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்329

முற்றுப்பெற்று அழகுடன் காட்சியளிக்கிறது. விமானத்தின்
உச்சிப்பகுதியில் நான்கு பக்கங்களிலும் சுமார் 100 சிற்பங்கள்
உள்ளன. கோபுரங்களில் பொதுவாகக் காணப்படும் சுதைச்
சிற்பங்கள் இங்கு கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. இங்குக்
காணப்படும் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சிவன்
ஆகிய திருவுருவங்கள், நந்தியின் உருவங்கள் ஆகியவை
இக்கோவில் சிவனுக்காக வடிக்கப்பட்டதைக் காட்டுகிறது.
யாளிகள், பூதகணங்கள், நடனமாதர் உருவங்கள், தாமரை
மலரின் விரிந்த உருவம் ஆகியவை விமானத்தில் காணப்படும்
அழகிய இதர சிற்பங்கள் ஆகும். கருவறையில் இக்காலத்தில்
விநாயகரின் திருவுருவம் உள்ளது.

கழுகு மலை வெட்டுவான் கோவில் தமிழத்தில்
ஈடுஇணையற்ற ஒற்றைக் கற்கோவிலாக விளங்குகிறது.
பாண்டிய மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள ஒப்பற்ற
கலைக் கருவூலமாக இது காட்சியளிக்கிறது.

சமணச் சிற்பங்கள்

வெட்டுவான் கோவிலுக்கு அருகிலுள்ள மலைப்பாறையில்
சமணச் சிற்பங்கள் பல உள்ளன. இச்சிற்பங்கள் கி.பி. 8ஆம்
நூற்றாண்டில் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன்
காலத்தில் அமைக்கப்பட்டன. இச்சிற்பங்கள், இம்மலை ஒரு
காலத்தில் ஒரு சிறந்த சமண மையமாக விளங்கியிருக்க
வேண்டும் என்பதைக் காட்டுகிறது. கழுகு மலையில்தான்
தமிழ்நாட்டிலேயே சமணச் சிற்பங்கள் அதிகம் உள்ளன எனலாம்.

கழுகு மலைச் சமணச் சிற்பங்கள் இம்மலையில் மூன்று
தொகுதிகளாகக் காணப்படுகின்றன. இச்சிற்பங்களின் அடியில்
வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. நேமிநாதர்,
பர்ஸ்வநாதர், மகாவீரர்
மற்றும் பல சமண தீர்த்தங்கரர்களின்
அமர்ந்த நிலையிலுள்ள சிற்ப உருவங்களும், யக்ஷர், யக்ஷி
ஆகியோர் சிற்பங்களும் இங்கு உள்ளன. தீர்த்தங்கரரின்
தலைக்கு மேற்பகுதியில் முக்குடையும் கொடி போன்ற