இக்கோவிலின் மூன்றாம் திருச்சுற்றாலையில் கிழக்குக்
கோபுரம் விக்கிரம சோழனால் (1118-1135) கட்டப்பட்டதாகும்.
மேலக் கோபுரம், முதல் திருச்சுற்று ஆகிய திருப்பணிகள்
மருதூர் ஆனையப்ப பிள்ளை என்பவராலும், அவர்
சகோதரர் வைத்தியநாதராலும் மேற்கோள்ளப்பட்டன.
இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் வடபுறம்
‘ஓலோக
மாதேவீச்சுரம்’ என்ற கற்கோவில் உள்ளது. இது
‘வட கைலாயம்’ எனப்படும்.
இராஜராஜ சோழனின் தலைமைத் தேவியான
லோகமா
தேவியால் இது கட்டப்பட்டதாகும். கோவிலின் தென்புறம்
‘தென் கைலாயம்’ எனப்படும் கற்கோவில் உள்ளது
.முதலாம்
இராஜேந்திர சோழனின் அரசி பஞ்சவன் மாதேவியாரால்
இக்கற்கோவில் கட்டப்பட்டது. தென் கைலாயத்
திருச்சுற்று
மாளிகைத் தூண்கள் நுளம்பாடியிலிருந்து
சோழர்களால்
கொண்டுவரப்பட்டவையாகும். இத்தூண்கள், நுளம்பர்களது
கலைத்திறனையும், தஞ்சைச் சோழர்களின் வெற்றிச்
சிறப்பினையும் கலையார்வத்தையும் உணர்த்துகின்றன.
சந்நிதி முன்னுள்ள சொக்கட்டான்
மண்டபம், கீழைக்
கோபுரத்திற்கு அருகிலுள்ள நூற்றுக்கால் மண்டபம்
ஆகியவை கட்டட, சிற்பக்கலைச் சிறப்புமிக்கவை.
சைவ சமயத்தின் சிறப்புமிக்க தலமாகவும், சிற்பம்,
கட்டடம், ஓவியம் ஆகிய பல கலைகளின் உறைவிடமாகவும்
திருவையாறு கோவில் உள்ளது.
திருவையாறு என்றவுடன் நமது நினைவிற்கு வருபவர்
தியாகராஜ சுவாமி ஆவார். தியாகராஜ சுவாமி கி.பி. 1767இல்
திருவாரூரில் பிறந்தார். இவர் திருவையாற்றில் பல ஆண்டுகள்
வாழ்ந்து கர்நாடக இசைக்குப் பெருந்தொண்டாற்றியுள்ளார்.
சிறந்த இராமபக்தராக விளங்கிய இவர், புதிய ராகங்கள் பல
உண்டாக்கிப் புகழ் பெற்றார், இசையின் பெருமையையும், இசை
இலக்கணச் சிறப்பினையும் இவர் பல ‘கிருதிகள்’ மூலம்
நமக்கு
உணர்த்தியிருக்கிறார். ‘தியாகராஜ கீர்த்தனங்கள்’ இசை உலகில்
புகழ் பெற்றவையாகும். இவர் கி.பி. 1847இல் திருவையாற்றில்
காலமானார். இவர் அடங்கிய இடம் (சமாதி)
|