பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்145

ஐயாறப்பர் கோவிலிலிருந்து கிழக்கில் சிறிது தொலைவில்
காவிரியாற்றின் வடகரையில் உள்ளது. அந்த இடம் இன்று
ஒரு சிறு கோவிலாகக் காட்சியளிக்கிறது. தியாகராஜ சுவாமியின்
இசைப் பக்தராக விளங்கிய வித்யா சுந்தரி பெங்களூர்
நாகரத்தினம் என்பவர் தியாகராஜர் அடங்கிய இடத்தில்
ஒரு ஆஸ்ரமத்தைக் கட்டினார் (1938). இங்குள்ள வால்மீகி
மண்டபம்
1962இல் கட்டப்பட்டது. இம்மண்டபத்தின் சுவர்களில்
இராமாயணத்தில் வரும் பல காட்சிகளும் இதர சில
சிற்பங்களும் காட்சியளிக்கின்றன. ஒவ்வோராண்டும் தியாகராஜ
சுவாமியின் நினைவுநாளையொட்டி (ஜனவரியில்) இங்கு இசை
விழா
சிறப்பாக நடைபெறுகிறது.

திருவையாறு அருகில் காவிரி நதியிலுள்ள பாலம் தஞ்சை
மராட்டிய மன்னர் சிவாஜியால் 1846-47இல் கட்டப்பட்டதாகும்.
திருவையாற்றில் காவிரி நதியின் கரையில் தஞ்சை மராட்டிய
மன்னர் சரபோஜியால் கட்டப்பட்ட ‘கலியாண மஹால்’ என்ற
அழகிய கட்டடமும் உள்ளது.

திருவையாற்றிலிருந்து 3 கி.மீ. தொலைவில் (திருவையாறு-
தஞ்சாவூர்ச் சாலையில்) திருக்கண்டியூர் உள்ளது. இங்கு
வீரட்டேசுவரர் கோவிலும் இதனருகில் பெருமாள் கோவிலும்
உள்ளன.