15. கங்கை கொண்ட சோழபுரம்
திருச்சி மாவட்டத்தில்,
கும்பகோணத்திலிருந்து 27 கி.மீ.
தொலைவில் ‘கங்கை கொண்ட சோழபுரம்’ உள்ளது.
(தஞ்சாவூரிலிருந்து 71 கி.மீ.) இவ்வூரின் வரலாற்றுச்
சிறப்பினையும், கலைச்சிறப்பினையும் இங்கே
காணலாம்.
வரலாற்றுச் சிறப்பு
தஞ்சையில் பிரகதீஸ்வரர்
ஆலயத்தைக் கட்டிச் சீரும்
சிறப்புமாக ஆட்சிபுரிந்தவர் இராஜராஜ சோழன். இராஜராஜ
சோழனின் மகன் முதலாம் இராசேந்திர சோழன்
ஆவார்.
இவரது ஆட்சிக் காலம் கி.பி. 1012முதல் 1044வரை ஆகும்.
இவர் தம் தந்தையைப் போல் சிறந்த வெற்றி வீரராக
விளங்கினார். இலங்கையை முழுவதும் வென்றார்.
வடஇந்தியாவில் வங்காளம் வரை சென்று பல வெற்றிகள்
பெற்றார். ‘கடராம்’ வரை சென்று வெற்றி பெற்றார். கங்கைவரை
சென்று வெற்றி பெற்ற இம்மன்னன் ‘கங்கை கொண்ட சோழன்’
என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார். கங்கைவரை தாம் அடைந்த
வெற்றிக்கு அறிகுறியாகக் ‘கங்கை கொண்ட சோழபுரம்’ என்ற
புதிய நகரை உண்டாக்கினார். கங்கை கொண்ட சோழபுரம்
உருவாகுமுன் அந்த இடம் ‘வன்னியபுரம்’ என்ற ஒரு சிற்றூராக
இருந்தது. கி.பி. 1023இல் புதிய நகர் உருவாக்கும் பணி
தொடங்கப்பெற்றது. கங்கை கொண்ட சோழபுரத்தில்
சிறப்புமிக்க அரண்மனை கட்டப்பட்டது. பலத்த
கோட்டைகள்
எழுப்பப்பட்டன. ‘கங்கை கொண்ட சோழீசுவரம்’
என்ற
சிவாலயம் எழுப்பப்பட்டது. ‘சோழகங்கம்’ என்ற மிகப்பெரிய
ஏரி வெட்டப்பட்டது. கி.பி. ஏறக்குறைய 1025இல் கங்கை
கொண்ட சோழபுரத்தை இராஜேந்திர சோழர் தமது அரசின்
புதிய தலைநகராகக் கொண்டார். சோழர் தலைநகர்
தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு
மாற்றப்பட்டது. வடக்கே துங்கபத்ரா நதி முதல்
தெற்கில்
இலங்கைவரை உள்ள
|